நீட் தேர்வு: 'பதவி நாற்காலிக்காக இன்னும் எத்தனை பலிகளைக் கொடுக்கப்போகிறார்கள்?'

ரித்துஸ்ரீ
Image caption ரித்துஸ்ரீ

திருப்பூரில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் ரித்துஸ்ரீ என்ற மாணவி புதன்கிழமை அன்று தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல பட்டுக்கோட்டையை சேர்ந்த வைஸ்யாவும் நீட் தேர்வு தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (நீட்) முடிவுகள் நேற்று வெளியாகின. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டை காட்டிலும் 9.01 சதவீதம் அதிகமாகும்.

இந்நிலையில், நீட் தேர்வில் தோல்வி அடைந்ததாக இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து, நீட் விலக்கு விவாதம் தமிழகத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது.

திருப்பூர் மாணவி தற்கொலை: நீட் தேர்வே காரணமா?

"கூட்டாட்சித் தத்துவத்தின் கீழ் செயல்படும் இந்தியாவில், நீட் விலக்கு எனும் மாநில அரசின் உணர்வுக்கு மதிப்பளிப்பது,மத்திய அரசின் அரசியல் சட்டக் கடமை என்பதை பிரதமர் இப்போதாவது உணர வேண்டும்" என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழக சட்டப்பேரவையில் இரண்டாண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட மசோதாவின் கதி என்ன ஆனது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். பதவி நாற்காலிக்காக இன்னும் எத்தனை பலிகளைக் கொடுக்கப்போகிறார்கள்? என்றும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட 2017ஆம் அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தமிழகத்தை உலுக்கியது. அப்போது நீட் தேர்வுக்கான எதிர்ப்பு குரல்கள் வலுவாக எழுந்தன. பின்னர் கடந்தாண்டு நீட் தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்கள் குழப்பத்தால் சர்ச்சை ஏற்பட்டது. தமிழகத்தில் இருந்து வெளி ராஜஸ்தான், அஸ்ஸாம் போன்ற வெளி மாநிலங்களுக்கு சென்று மாணவர்கள் தேர்வு எழுதும் சூழல் உருவாகியது.

இந்நிலையில், தற்போது இந்த இரு மாணவிகள் தற்கொலை செய்தி மீண்டும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற விவாதத்தை எழுப்பியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்