உலக சிட்டுக்குருவிகள் தினம்: சிட்டுக்குருவிகளை மீட்கும் ஒரு தமிழ் பெண்ணின் முயற்சி

உலக சிட்டுக்குருவிகள் தினம்: சிட்டுக்குருவிகளை மீட்கும் ஒரு தமிழ் பெண்ணின் முயற்சி

உலக சிட்டுக்குருவிகள் தினம் மார்ச் 20ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. உலக அளவில் அருகிவரும் சிட்டுக்குருவி இனங்களை பாதுகாக்கவும் அவை அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து உலகுக்கு உணர்த்தி விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மார்ச் 20ஆம் தேதி சிட்டுக்குருவிகள் தினம் ஆக 2010ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், குயவரான பெருமாள் என்பவரின் உதவியோடு சிட்டுக்குருவிகளுக்கு கூடு வடிவமைத்து, அதனை இலவசமாக அனைவருக்கும் வழங்கி வருகிறார் மருத்துவர் சாதனா.

2017ல் இவர் தொடங்கிய ‘சிட்டுக்குருவி மீட்பர்கள்‘ என்கிற சமூக குழு விழிப்புணர்வு அளித்தல், கூடுகள் விநியோகம், குருவிகளை மீட்டு விடுவித்தல் பணிகளை செய்கிறது.

மனிதகுல நலனுக்காக சிட்டுக்குருவிகளை பாதுகாத்து, இயற்கையை பராமரிப்பது எனது கடமை என்கிறார் சாதனா.

காணொளி தயாரிப்பு, படத்தொகுப்பு: கே.வி. கண்ணன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :