பாரதிய ஜனதா கட்சி செயல் தலைவராக ஜெ.பி. நட்டா தேர்வு

பாரதிய ஜனதா கட்சி செயல் தலைவராக ஜெ.பி. நட்டா தேர்வு படத்தின் காப்புரிமை Getty Images

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெகத் பிரகாஷ் நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த இவர் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

இவர் ஆறு மாத காலத்திற்கு செயல் தலைவராக இருப்பார். பா.ஜ.கவின் தலைவராக அமித் ஷாவே நீடிப்பார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேச பா.ஜ.க பொறுப்பாளராக இவர் நியமிக்கப்பட்டார், அங்கு 62 தொகுதிகளில் பா.ஜ.க வென்றது.

மூன்று முறை இமாச்சல பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.

கடந்த மோதி ஆட்சியில் நட்டா சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார்.

ஆர். எஸ். எஸ் அமைப்பின் நம்பிக்கைக்குரிய நபராக நட்டா பார்க்கப்படுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்