பா.ஜ.கவில் இணைய தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள் சொன்ன காரணம் என்ன?

பா.ஜ.கவில் இணையும் நான்கு தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள்

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நான்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமாக இருந்த ரமேஷ், சுஜானா செளத்ரி, காரிகபதி மோகன் ராவ் மற்றும் டி.ஜி. வெங்கடேஷ் ஆகிய நான்கு மாநிலங்களவை உறுப்பினர்களும் தெலுங்கு தேசத்திலிருந்து விலகி பா.ஜ.கவுடன் கரம் கோர்த்துள்ளனர்.

"நான் பா.ஜ.கவில் இணைகிறேன். மற்ற விஷயங்களை இன்றிரவு நடக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் விவரிப்பேன்" என சுஜானா செளத்ரி கூறி உள்ளார்.

சந்திரபாபு நாயுடு வெளிநாடு சென்றுள்ள சமயத்தில் இவர்கள் கட்சியிலிருந்து விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் நடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் படுதோல்வி அடைந்தது.

ஆந்திர பிரதேசத்தில் ஆட்சியை இழந்தார் சந்திரபாபு நாயுடு.

அரசியல் அமைப்பு சட்டம் 10 வது அட்டவணை பிரிவு 4 அடிப்படையில் பா.ஜ.கவுடன் இணைய திட்டமிட்டுள்ளதாக அவர்கள் நிறைவேற்றிய தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோதியின் வளர்ச்சி திட்டங்களால் ஈர்க்கப்பட்டு இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பின் பா.ஜ.க தலைவர் அமித் ஷா, செயல் தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை சந்தித்தனர்.

பின்னர் அவர்கள் அளித்த செய்தியாளர் சந்திப்பில், "மொத்த இந்தியாவும் மோதிவுடன் இருக்க விரும்புகிறது. அதனால்தான் நாங்களும் இந்த முடிவை எடுத்தோம். ஆந்திர பிரதேசத்திற்கு பல திட்டங்கலை கொண்டுவர, ஆந்திர மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு இது. இதுவே சரியான தளம்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

தெலுங்கு தேசம் கட்சி இது சட்டத்திற்கு புறம்பானது. அவர்கள் மீது நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்