இந்த வேலையில்லா பொறியியலாளருக்கு தீர்வு அளிக்குமா 2019 பட்ஜெட்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பட்ஜெட் 2019 வேலைவாய்ப்பு பிரச்சனைக்கு தீர்வைத் தருமா?

இந்தியாவில் வேலையின்மை 7.91 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் என்கிற அமைப்பு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் கடந்த 45 ஆண்டு கால வரலாற்றில் வேலையில்லாத் திண்டாட்டம் என கூறுகிறது.

நாடு எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடியை சமாளிக்க 2019ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற கேள்வியை இந்திய ஊடகங்கள் எழுப்புகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்களை இந்திய அரசு மறுக்கின்றது.

குறிப்பாக, நாடாளுமன்ற மாநிலங்களவையில் முன்வைக்கப்பட்ட இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) சந்தோஷ் குமார் கங்வார், பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக்காட்டினார்.

சீனா மற்றும் ஆசிய பசிபிக் நாடுகளைவிட இந்தியாவில் வேலையின்மை விகிதம் குறைவாக உள்ளது என அதில் தகவல் வெளியாகியுள்ளதாகவும், ஆனாலும் இப்போது இருக்கும் வேலையின்மை விகிதத்தை மேலும் குறைக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ளும் என்றார்.

இதற்கிடையே, வேலையின்மை திண்டாட்டத்தால் சிக்கித் தவிக்கும் இளைஞர்களில் ஒருவரான ஜெனிபர் தாவீது என்பவரை சென்னையில் சந்தித்தோம்.

ஜெனிபர் தாவீது தனது கதை கூறும் காணொளி இது.

காணொளி தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :