நிர்மலா சீதாராமன் - இந்தியாவின் முதல் முழு நேர பெண் நிதியமைச்சர்

படத்தின் காப்புரிமை Hindustan Times

இந்தியாவில் முதன்முதலில் ஒரு முழுநேர பெண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.

 • 1970க்கு பிறகு இரண்டாவது முறையாக ஒரு பெண் நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார்.
 • 49 வருடத்திற்கு முன்பு நிதி அமைச்சராக இருந்த இந்திரா காந்தி பட்ஜெட் தாக்கல் செய்தார்
 • ஆனால் இந்திரா காந்தி அப்போது பிரதமராகவும் இருந்தார். நிதித்துறையை அவர் தன்னிடம் வைத்திருந்தார்.
 • மதுரையில் பிறந்த நிர்மலா சீதாராமன் திருச்சியில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார்.
 • அதன்பின் ஜேஎன்யுவில் பொருளாதாரத்தில் தன்னுடைய பட்டமேற்படிப்பை முடித்தார்.
 • அதன்பிறகு வெளிநாட்டிற்கு சென்றவர் 1991-ல் மீண்டும் இந்தியா வந்தார்.
 • 2003 முதல் 2005 வரை தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார்.
 • 2008-ல் பாஜகவில் இணைந்த நிர்மலா சீதாராமன். அக்கட்சியின் தேசிய செயற்குழுவின் உறுப்பினரானார்.
 • 2010-ல் பாஜகவின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.
 • 2014-ல் மோதி அரசாங்கத்தில் நிர்மலா சீதாராமன் முதலில் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்தார்.
 • பின்னர் 2017- இல் நாட்டின் மிகமுக்கியமான பாதுகாப்புதுறை அமைச்சகம் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
 • பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன், ரஃபேல் விமானம் தொடர்பான சர்ச்சையில் மோதி அரசின் தரப்பில் பக்கபலமாக நின்றார்.
 • இவரின் காலகட்டத்தில் காஷ்மீரில் நடந்த ஒரு வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் இறந்தனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லையில் நுழைந்து பாலகோட்டில் தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் கூறியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்