தங்கம், மோட்டர் பைக்கோடு சீர் வரிசையில் இடம்பெறும் தண்ணீர் வண்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குடிநீர் பிரச்சனை: பொங்கல் சீர் வரிசையில் இடம்பெறும் தண்ணீர் வண்டி

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி, சாயல்குடி, கமுதி, முதுகுளத்தூர் மற்றும் சிக்கல் உள்ளிட்ட ஊர்களில் உள்ள கிராம மக்களின் வாழ்வில் ஒன்றாகி விட்டது இந்த தண்ணீர் தள்ளுவண்டி.

டிராக்டர் டேங்கர்கள், காவிரி குடிநீர் குழாய்கள் என வீட்டிற்கு அருகிலும் சற்று தொலைவிலும் கிடைக்கும் குடிநீரை சேகரிக்கவும், மற்ற பிற பொருட்களை எளிதாக எடுத்து வரவும் இது பயன்படுகிறது.

புதிதாக திருமணமான தங்களின் மகள்களுக்கு பெற்றோர்கள் தரும் பொங்கல் சீதனத்தில் கரும்பு, வாழைப்பழம்,பொங்கல் பானை மற்றும் மஞ்சள் கொத்து ஆகியவற்றோடு இந்த தண்ணீர் வண்டியும் இடம் பிடிக்கிறது.

காணொளி: பிரபுராவ் ஆனந்தன்

படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்