ஆப்ரேஷன் கமலா: கர்நாடக அரசுக்கு நீடிக்கும் சிக்கல், காப்பாற்ற இறுதிக்கட்ட முயற்சி - நடப்பது என்ன?

ஆப்ரேஷன் கமலா: கர்நாடக அரசுக்கு நீடிக்கும் சிக்கல் - நடப்பது என்ன? படத்தின் காப்புரிமை Getty Images

கர்நாடகாவில் ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ள எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கும் விதமாக மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

பாஜகவின் ஆப்ரேஷன் கமலா போன்ற எந்தவித அலையாலும் அடித்து செல்லப்படாத நபர்களை தேர்ந்தெடுக்க முதலமைச்சர் குமாரசாமிக்கு அவர்கள் உதவியாக இருப்பர்.

"அமைச்சர்கள் தாங்களாக முன்வந்து தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். அமைச்சரவையை மாற்றியமைக்க காங்கிரஸ் என்ன முடிவை வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம் என இவர்கள் கோரியுள்ளனர்." என அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியின்ன பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அமைச்சர்களுடனான சந்திப்பிற்கு பிறகு தெரிவித்தார்.

அந்தக் கூட்டத்தில் குமாரசாமியும் கலந்து கொண்டார்.

"இதே மாதிரியான ஒரு நடவடிக்கையை மதச்சார்பற்ற ஜனதா தள அமைச்சர்களும் மேற்கொள்வார்கள். அதன்பிறகு முதலைமைச்சர், ஆளுநர் வஜுபாய் வாலை சந்தித்து இந்த ராஜிநாமாக்களை ஏற்றுக் கொள்ளுமாறு கூறுவார்." என பெயர் வெளியிட விரும்பாத மூத்த அமைச்சர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவுகள் எல்லாம் எடுக்கப்பட்ட பிறகும், 21 நாட்களுக்கு முன் அமைச்சராக்கப்பட்ட சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ், ஆளுநர் வாலாவை சந்தித்து அமைச்சரவையில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு அவர் ஆதரவு வழங்குவதை தடுக்க நாகேஷுக்கு அமைச்சரவை வழங்கப்பட்டது.

அப்ரேஷன் கமலாவில் இல்லாத அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு இந்த ராஜிநாமா ஒரு தெளிவான சமிக்ஞை. இந்த உறுப்பினர்கள் மாநிலத்தின் கூட்டணி தலைவர்கள் மீது அதிருப்தியில் இருந்தனர். அதற்கு காரணம் அவர்களுக்கு அமைச்சரவை வழங்கப்படவில்லை என்பதும் அவர்களின் தொகுதிக்கு போதிய நிதி வழங்கப்படவில்லை என்பதும்தான்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆப்ரேஷன் கமலா

கர்நாடகாவில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஒரு முக்கிய திட்டத்தால் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. அது பாஜகவுடன் ஒத்து போகக் கூடிய மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் எம் எல் ஏக்களை ராஜிநாமா செய்ய வைப்பது. ஆப்ரேஷன் கமலா என்பது ஆளும் கூட்டணியை சேர்ந்த எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்து அதன்பின் பாஜக சார்பாக போட்டியிட்டு வெற்றிப்பெறுவதாகும்.

இதற்கு காரணமென்று இரண்டு விஷயங்கள் கூறப்படுகின்றன. ஒன்று அவர்களுக்கு அமைச்சரவை வழங்கப்படவில்லை என்ற அதிருப்தி. மற்றொன்று வளர்ச்சி திட்டங்களை கிடப்பில் போடுவது. பெங்களூரு வளர்ச்சி அமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஜி.பரமேஷ்வரா ஆகியோரால் வளர்ச்சித் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றும் இவர்கள் கருதுகிறார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

"சில காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்துவிட்டனர். அதில் சிலருக்கு அமைச்சரவை வழங்கப்படவில்லை என வருத்தம் உள்ளது. அது குறித்து ஆலோசித்து வருகிறோம்." என வேணுகோபால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமைச்சரவை மாற்றம் அதிருப்தியில் உள்ளவர்களை குறி வைத்து நடத்தப்படுகிறது.

"அவர்கள் இல்லாமல் காங்கிரஸ் இந்த அளவுக்கு வளர்ந்திருக்க வாய்ப்பில்லை" என்றார் மூத்த தலைவர் ஒருவர்.

ஆட்சியைக் கவிழ்க்கும் பாஜகவின் திட்டத்திற்கு வலு சேர்த்துள்ளது எம்எல்ஏ நாகேஷின் ராஜிநாமா. காங்கிரஸ் மற்றும் ஜனதா தள எம்எல் ஏக்களை ராஜிநாமா செய்ய வைத்து 224 உறுப்பினர்கள் கொண்ட ஆட்சியை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்பதே ஆப்ரேஷன் கமலாவின் திட்டம்.

காங்கிரஸ் மற்றும் ஜனதா தளத்தைச் சேர்ந்த 12 எம் எல் ஏக்களின் ராஜிநாமாவை சபாநாயகர் பெற்றுக் கொண்டால், சட்டசபையில் ஆளும் கட்சி தரப்பு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 212 ஆக குறையும். பெரும்பான்கைகு 106 எம்எல்ஏக்கள் தேவை. அதில் பாஜகவின் பக்கம் 105 எம்எல்ஏக்கள் உள்ளனர். நாகேஷின் ராஜிநாமால் பாஜகவின் பக்கம் 106 எம்எல்ஏக்கள் இருப்பர்.

பெயர் வெளியிட பாஜக தலைவர் ஒருவர், அடுத்தபடியாக 10 எம்எல்ஏக்கள் தங்கள் ராஜிநாமவை அறிவிப்பர் என பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்