சென்னைக்கு வந்த காவிரி நதி நீர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சென்னைக்கு ரயிலில் வந்த காவிரி - சிறப்பு காணொளி

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்குக் குடிநீர் கொண்டுவரும் திட்டத்தின் கீழ் முதல் ரயில் வெள்ளிக்கிழமை (நேற்று) சென்னை வந்தடைந்தது. இந்த ரயில் மூலம் ஒரு தடவைக்கு இரண்டரை லட்சம் தண்ணீர் கொண்டுவர முடியும்.

சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுவதால், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்குக் குடிநீரை ரயில் மூலம் கொண்டுவர முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, ஜோலார்பேட்டை மேட்டு சக்கரக்குப்பம் நீரேற்று நிலையத்திலிருந்து ரயில்வே வேகன்களில் குடிநீர் நிரப்பப்பட்டு, அந்த ரயில் நேற்று காலை ஜோலார்பேட்டையிலிருந்து 7.20 மணியளவில் புறப்பட்டது. இந்த ரயில் காலை 11.35 மணியளவில் சென்னை வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

இந்த ரயிலில் மொத்தம் ஐம்பது வேகன்கள் இணைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வேகனிலும் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீரைவிட அதிக தண்ணீரை நிரப்ப முடியும் என்றாலும் ஒவ்வொன்றிலும் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே நிரப்பப்படுகிறது. இதன்படி நேற்று வந்து சேர்ந்த ரயிலில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது.

விரிவாக படிக்க: ரயிலில் வந்த தண்ணீர்: சென்னையின் தாகத்தைத் தீர்க்குமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :