"கார்கில் ஆக்கிரமிப்பு பற்றி செய்தியாளர் மூலம் தெரிந்துகொண்ட பாதுகாப்பு அமைச்சர்"

கார்கில் போரில் இந்திய சிப்பாய்கள். படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கார்கில் போரில் இந்திய சிப்பாய்கள்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் கார்கில் மலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்தது. கார்கில் மலையின் உச்சிக்கு பாகிஸ்தான் வீரர்கள் ஊடுருவிச் சென்றிருந்ததே இதன் தொடக்கம் ஆகும்.

1999, மே 8ம் தேதி பாகிஸ்தான் நாட்டின் நார்த்தென் லைட் படையின் கேப்டன் இஃப்தேகார் மற்றும் ராணுவத்தை சேர்ந்த அப்துல் ஹகிம் 12 வீரர்களுடன் கார்கிலின் ஆசாம் செளகி என்ற இடத்தில் முகாமிட்டிருந்தனர். அங்கே இந்திய கால்நடை மேய்ப்பர்கள் சிலர் தங்கள் கால்நடைகளை மேய்த்துக்கொண்டிருந்தனர்.

அவர்களைப் பிடித்துவைக்கலாமா என்று பாகிஸ்தானின் வீரர்கள் தங்களுக்குள் கலந்து பேசினார்கள். அவர்களை கைது செய்தால் தங்களிடம் உள்ள குறைவான உணவை அவர்களுக்குப் பகிர்ந்து தர நேரும் என்பதால் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.

இந்திய வீரர்கள் தொலைநோக்கி கொண்டு அந்த இடத்தை ஆராய்ந்துவிட்டு சென்று விட்டார்கள். சுமார் 2 மணி அளவில் அந்தப் பகுதியில் லாமா ஹெலிகாப்டர் ஒன்று பறந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

பாகிஸ்தான் கேப்டன் இஃப்தேகாருக்கு அந்த ஹெலிகாப்டரின் விமானியின் பேட்ஜ் தெரியும் அளவிற்கு அந்த ஹெலிகாப்டர் கீழே பறந்தது. இது இந்திய வீரர்களுக்கு நிறைய பாகிஸ்தான் வீர்ர்கள் அங்கு உள்ளனர் என்பதை அறிவதற்கான முதல் வாய்ப்பாக அமைந்த்து.

கார்கில் போரைக் கொண்டு எழுதப்பட்ட 'விட்டன்ஸ் டூ ப்லண்டர்- கார்கில் ஸ்டோரி அன்ஃபோல்ட்ஸ்' என்னும் புத்தகத்தை எழுதிய பாகிஸ்தானின் ஒய்வுபெற்ற கர்னல் அஷ்ஃபாக் ஹூசைன், "நான் கேப்டன் இஃதேகாரிடம் பேசினேன், அடுத்த நாளும் இந்தியாவின் லாமா ஹெலிகாப்டர் அங்கு வந்தது மற்றும் ஆசாம், தாரிஃப் மற்றும் தஷஃபின் போன்ற இடங்களில் இந்தியா துப்பாக்கிச்சூடு நடத்தியது என கூறினார். ராணுவ தலைமையிடத்திலிருந்து இந்திய ஹெலிகாப்டர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த கேப்டனுக்கு அனுமதி தேவைப்பட்டது. ஆனால் அது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்காது எனக் கருதப்பட்டதால் அனுமதி கிடைக்கவில்லை" என பிபிசியிடம் கூறினார்.

இந்திய அரசாங்கத்திற்கு தகவல் இல்லை

இந்திய ராணுவத்திற்கு பாகிஸ்தான் ஊடுருவல் பற்றித் தெரிந்திருந்தாலும், இதை தாங்களே பார்த்துக்கொள்ளலாம் என அரசாங்கத்திற்கு தகவல் கொடுக்கவில்லை ராணுவம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் ராணுவ செய்தியாளரான ஜஸ்வந்த் சிங்கின் மகன் மானவேந்திர சிங், "என்னுடைய நண்பர் ராணுவ அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அவர் நேரில் சந்தித்து பேச விரும்பினார். நான் சென்றதும் அவர் எல்லையில் ஏதோ பிரச்சனையாக இருக்கிறது, ஓர் ஊடுருவலை சமாளிக்க ஒரு ராணுவ வீரர்கள் குழு ஒரு ஹெலிகாப்டரில் அங்கே அனுப்பப்பட்டிருக்கிறது என்று கூறினார். இதை நான் என் அப்பாவிடம் கூறினேன். அவர் அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸிடம் பேசினார். அவர் அன்று ரஷ்யா செல்ல வேண்டி இருந்தது. அந்த பயணத்தை ரத்து செய்து விட்டு இதை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார்" என கூறினார்.

இந்தியாவிலிருந்து சியாச்சினை பிரிக்க செய்த திட்டம்

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி வேத் ப்ரகாஷ் மாலிக் போலந்து மற்றும் செக் குடியரசுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார். அப்போது அவருக்கு தகவல் இந்திய தூதரகம் மூலம் கிடைத்தது.

லாகூர் மாநாட்டுக்குப் பிறகு பாகிஸ்தான் இந்த ஊடுருவலை மேற்கொள்ள காரணம் என்னவாக இருக்கும் என்பது அப்போதைக்கு கேள்வியாக இருந்தது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் இணை ஆசிரியர் சுஷாந்த் சிங், " சியாச்சின் பனிப்பாளம் இருக்கும் லடாக் பகுதியின் முக்கிய சாலையான 1டி தேசிய நெடுஞ்சாலையில் சரக்குப் போக்குவரத்தை நிறுத்தி அந்தப் பகுதியை கையகப்படுத்தி சியாச்சின் பகுதியை பாகிஸ்தானிடம் ஒப்படைக்கும்படி இந்தியாவை வற்புறுத்துவதே இந்த ஊடுருவலின் முக்கிய நோக்கம் ஆகும்" என கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை SUSHANT SINGH

"1984 ல் இந்தியா சியாச்சினை தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தது முஷரஃப்க்கு பிடிக்கவில்லை. அதன்பின் நிறைய பாகிஸ்தான் படைகள் அந்த பகுதியைத் திரும்பப் பெற, இந்தியாவை அங்கிருந்து விரட்ட நிறைய முயற்சிகள் செய்தன. ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது" என சுஷாந்த் சிங் கூறுகிறார்.

நடிகர் திலிப் குமார் கண்டனம்

இந்த விஷயத்தின் உண்மை இந்திய அரசாங்கத்திற்கு தெரிந்த போது அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அப்போதைய பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிஃபை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் மஹமூத் கசூரி தன்னுடைய சுயசரிதையான 'நெய்தர் எ டாக் நார் எ டவ்' என்னும் புத்தகத்தில், என்னுடன் மிகவும் மோசமாக நடந்துகொள்கிறீர்கள். ஒரு புறம் லாகூரில் என்னுடன் சேர்வது போல் சேர்ந்தீர்கள் இப்போது உங்கள் ஆட்கள் இங்கே கார்கில் மலைப்பகுதியை ஆக்கிரமித்து உள்ளனர் என வாஜ்பாய் ஷரிஃபிடம் புகார் செய்ததாக கூறினார். அதற்கு இதைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது. தான் முஷரஃபிடம் பேசிவிட்டு பேசுவதாக கூறினார். அதற்கு வாஜ்பாய் நீங்கள் என் அருகில் இருக்கும் ஒருவரிடம் பேசுங்கள் என்று கூறி போனை அவரிடம் தந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

நவாஸ் ஷெரிஃப் தொலைபேசியில் பிரபல நடிகர் திலிப் குமாரின் குரலைக் கேட்டவுடன் ஆச்சரியத்தில் மூழ்கினார். திலிப் குமார் , உங்களிடமிருந்து நாங்கள் இதை எதிர்ப்பார்க்கவில்லை. ஏனென்றால் தாங்கள் எப்போதும் இந்தியா-பாகிஸ்தான் அமைதி குறித்து பேசுவீர்கள். உங்களிடம் ஒன்று கூற விரும்புகிறேன். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையே பிரச்சனை வந்தால் இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக உணர்வதில்லை. அவர்கள் தங்கள் வீட்டைவிட்டு வெளிவர முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என கூறினார்.

'ரா'வுக்கு தகவல் இல்லை

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த ஊடுருவல் சம்பந்தமாக இந்திய உளவுத்துறைகளுக்கு எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்பது அதிசயமான விஷயமாகும்.

இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சதிஷ் சந்திரா, "இந்திய வெளி நாட்டு உளவு அமைப்பான ரா-வுக்கு இதைப்பற்றி முன்கூட்டி தகவல் எதுவும் கிடைக்கவில்லை. பாகிஸ்தான் வெளியில் இதற்கான உதவி எதும் பெறவில்லை. அதனால் தெரியவில்லை. ஆனால் ஊடுருவிய பிறகு ரா-வுக்கு பாகிஸ்தான் முன்னேறிவரும் தகவல் தெரிந்திருந்தது" என கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் திறமையான திட்டம்

இதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என பல ஆலோசனைகள் நடந்தது. இந்த கார்கில் போரில் நியமிக்கப்பட்ட லெஃப்டினண்ட் ஜெனெரல் ஹர்சரண்ஜீத்சிங் "இது பாகிஸ்தானின் மிக நல்ல திட்டம் ஆகும். அங்கே காலியாக இருக்கும் மிகப்பெரிய பகுதியை அவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டது அவர்களின் சாதனையாகும்" என கூறியிருந்தார்.

மேலும் அவர், மே 3லிருந்து ஜூன் முதல் மாதம் வரை நம்முடைய படை நன்றாக செயலாற்றவில்லை. என்னைக் கேட்டால் நாம் மிகவும் மோசமாக செயல்பட்டோம். ஆனால் அதன் பிறகு 8வது பிரிவு வந்தவுடன் நிலைமை சிறிது சரியானது. அந்த பகுதியில் எப்படி செயல்படவேண்டும் என்பது எங்களுக்கு தெரிந்திருந்தது. இது மிகவும் கஷ்டமான நடவடிக்கை ஆகும் ஏனென்றால் நாம் மலையின் கீழே இருந்தோம் அவர்கள் மேலே இருந்தார்கள். என கூறினார்.

"அவர்கள் படியில் ஏறி மேலே சென்றிருக்கிறார்கள் நாம் பின்னால் ஏறி அவர்களை கீழே இறங்கச் செய்ய வேண்டும் என்று புரிந்துகொள்ளுங்கள். இரண்டாவது அந்த மலை உச்சியில் ஆக்ஸிஜன் குறைவாகவே இருக்கும். மூன்றாவது, மலையில் போர் செய்யும் பயிற்சியில் நாம் பலவீனமாக இருந்தோம்" என விளக்கினார்.

ஜெனரல் முஷாரஃபின் கூற்று

படத்தின் காப்புரிமை Getty Images

இது ஒரு நல்ல திட்டம் என்று ஜெனரல் முஷரஃப் திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை கூறினார். அவர் இந்திய ராணுவத்தை ஒரு சிக்கலில் மாட்டிவிட்டார்.

முஷாரஃப் தன்னுடைய சுயசரிதை 'இன் த லைன் ஆஃப் ஃபைர்' என்னும் புத்தகத்தில், "எங்கே எங்கள் எட்டு அல்லது ஒன்பது வீர்ர்கள் இருந்தார்களோ அங்கே சிறு படையைக் கொண்டு தாக்கியது இந்தியா . ஜுன் மாதம் பாதி வரை அவர்களுக்கு எதிலும் வெற்றி கிடைக்கவில்லை. இந்தியா தங்கள் 600 வீர்ர்கள் உயிரிழந்தனர் என ஒப்புக்கொண்டனர். 1500 வீர்ர்கள் காயமடைந்ததாக ஒப்புக்கொண்டனர். ஆனால் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி அவர்களது இழப்பு இதை விட இரண்டு மடங்கு. இந்தியாவில் சவப்பெட்டியின் எண்ணிக்கை குறைபாடு ஏற்படும் அளவிற்கு இழப்பு இருந்தது" என எழுதியிருந்தார்.

டொலொலிங்கின் வெற்றி

ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் இந்த போர் இந்தியாவின் கட்டுபாட்டில் வந்தது. அந்த சமயத்தில் இந்தியப் படையின் தலைவர் ஜெனரல் வேத் பிரகாஷ் மாலிக்கிடம் நான் இந்த போரின் முடிவு எப்போது வரும் என கேட்டேன் ? அதற்கு மாலிக் டோலொலிங்கில் வெற்றி பெறும்போது என்று கூறினார். இந்த போர் வீரர்கள் ஒருவருக்கொருவர் பக்கத்தில் நின்று திட்டுவதும் சுட்டு கொல்வதுமாக இருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதற்காக நாம் நிறைய இழந்திருக்கிறோம். ஆறு நாட்கள் வரை இதை நம்மால் கட்டுப்படுத்த முடியுமா என சந்தேகமாக இருந்தது. ஆனால் அங்கே வெற்றி கிடைத்தவுடன் இதை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை வந்தது என மாலிக் கூறினார்.

மலையில் நடந்த போர்

இந்த போர் 100 கிலோமீட்டர் பரப்பில் நடந்தது. அதில் 1700 பாகிஸ்தான் வீரர்கள் இந்திய எல்லையின் 8 அல்லது 9 கிலோமீட்டர் அருகில் இருந்தனர். இதில் 527 வீர்ர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 1,363 வீரர்கள் காயப்பட்டுள்ளனர்.

சுஷாந்த் சிங்கின் கூற்றுபடி இந்த போர் கார்கில் மலையில் நடந்ததால் ஒரு பாகிஸ்தான் வீரரை எதிர்கொள்ள 27 வீரர்கள் தேவை. இந்தியா தன்னுடய பெரும் படையை அங்கே அனுப்பியது.

படத்தின் காப்புரிமை Getty Images

கடைசிவரை பாகிஸ்தானின் தலைமை ஆதரவு அளித்திருந்தால் பலன் வேறாக இருந்திருக்கும் என முஷாரஃப் கூறினார்.

அவர் தன்னுடைய சுயசரிதையில் இந்தியா தன்னுடைய விமானப்படையை ஏவி இதை பெரிதாக்கிவிட்டது. இந்தியாவின் விமானப்படை எல்லைதாண்டி பாகிஸ்தானுக்குள் வந்து குண்டு வீசியதால் இந்தியாவின் ஒரு ஹெலிகாப்டர் மற்றும் இரண்டு ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இந்தி விமானப்படை

படத்தின் காப்புரிமை Getty Images

முதலில் இந்தியா இரண்டு விமானங்களையும் ஒரு ஹெலிகாப்டரையும் இழக்க நேரிட்டது. ஆனால் இந்தியாவின் விமானப்படை மற்றும் பீரங்கிகள் பாகிஸ்தான் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் அது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

நசிம் செஹ்ரா தன்னுடைய புத்தகத்தில், இந்த தாக்குதல் மிக பயங்கரமாக இருந்தது. மேலும் பாகிஸ்தான் படைக்கு துப்பாக்கி சரிவர கிடக்காததால் அவர்கள் தடுமாறினர் என குறிபிட்டிருந்தார்.

கார்கில் போரில் காமாண்டராக இருந்த மோஹிந்தர் புரி, கார்கில் போரில் விமானப்படையை ஈடுபடுத்தியது உளவியல் தாக்குதலே. விமானத்தின் சத்தம் கேட்டவுடன் பாகிஸ்தான் வீரர்கள் சிதறி அடித்து ஒடினார்கள் என கூறினார்.

அமெரிக்காவிடம் உதவி

ஜூன் மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து போரில் இந்தியாவின் கை ஓங்கியது. அது ஜூலை வரை நீடித்தது. வேறு வழியில்லாமல் அமெரிக்காவின் சுதந்திர தினமான ஜுலை மாதம் 4 ஆம் தேதி ஷெரிஃப் அமெரிக்க அதிபர் கிளிண்டள் உதவியை நாடினார்.

கிளிண்டனை ஷெரிஃப் சந்தித்தபோது அங்கே கிளிண்டனின் தெற்காசிய நாடுகளின் செய்தி தொடர்பாளர் ப்ரூஸ் ரய்டல் அந்த சந்திப்பில் இருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதைக் குறித்து ப்ரூஸ் ரய்டல் தன்னுடைய பத்திரிகையில், " எந்த நிபந்தனைகளும் இல்லாமல் உங்கள் படைகளை திரும்ப வரச்சொல்லுங்கள் என்று உங்களிடம் ஏற்கனெவே நான் கூறினேன். இல்லையென்றால் கார்கில் போருக்கு முழு காரணமும் பாகிஸ்தான் தான் என்று கூறப்படும்" என கிளிண்டன் கூறியதாக குறிப்பிட்டுள்ளார். இதை கேட்டதும் நவாஸ் ஷெரிஃப் அதிர்ந்துவிட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் தூதுக்குழுவில் இடம் பெற்றிருந்த தாரிஃப் ஃபாதிமா, ஃப்ரம் கார்கில் டூ கூ என்னும் புத்தகத்தின் ஆசிரியர் நசிம் செஹ்ராவிடம், கிளிண்டனை சந்தித்துவிட்டு வெளியே வந்த ஷெரிஃப் முகத்தில் கவலைத் தெரிந்தது. அவரின் பேச்சில் இருந்து, அவரிடத்தில் தொடர்ந்து போராட சக்தி இல்லை என்று தெரிந்தது. அங்கே ஷெரிஃப் கிளிண்டனிடம் பேசிக் கொண்டிருக்கையில் தொலைக்காட்சியில் இந்தியா டைகர் மலையை பிடித்துக் கொண்ட செய்தி ஓடிக் கொண்டிருந்தது.

இதைக்குறித்து நவாஸ் ஷெரிஃப் முஷரஃபிடம் கேட்டபோது அவர் அதை மறுக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :