சந்திரயான் -2: ‘நிலவு குறித்து புதிய தகவலை நமக்கு தரும்’ - பிரதமர் நரேந்திர மோதி

சந்திரயான் -2: 'நிலவு குறித்து புதிய தகவலை நமக்கு தரும்' - பிரதமர் மோதி படத்தின் காப்புரிமை ISRO

சந்திரயான் -2 இன்று திங்கள் கிழமை மதியம் 2.43 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்தியர்கள் இது குறித்து பெருமை கொள்கிறார்கள். சந்திரயான் மிகவும் தனித்துவம் வாய்ந்தது. ஏனென்றால் இது நிலவின் நிலப்பரப்பின் தென் துருவப்பகுதியை ஆராய்ந்து தகவலைக் கொடுக்கும். இது இதுவரை யாரும் செய்யாத ஒன்று என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் சந்திரயான் -2 போன்ற முயற்சி இளைஞர்கள் அறிவியலை மற்றும் புது கண்டுபிடிப்புகளை நோக்கி செல்ல ஊக்குவிக்கும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சந்திரயான் -2 விண்ணில் ஏவப்பட்டதற்கு வாழ்த்துகள் தெரிவித்ததோடு , இதற்கு ஆதரவு அளித்த பிரதமர் மோதிக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார் அமித் ஷா

கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தன்னுடைய வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.

இதை செய்வதற்கு பல மணிநேர உழைப்பு தேவைப்படும் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் நடிகர் ஷாருக் கான்.

சந்திரயான் - 2 -ன் வெற்றிகரமாக அமைய தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் சுஷ்மா ஸ்வராஜ்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்திரயான் -2 வில் இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்