மும்பையில் எம்டிஎன்எல் கட்டடத்தில் தீ விபத்து: சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்

मुबंई में आग படத்தின் காப்புரிமை ANI

மும்பையில் தொலைத்தொடர்புத் துறையின் எம்டிஎன்எல் (மகாநகர் டெலிபோன் நிகம்) கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்ட தகவலின்படி, தீ விபத்து நடந்த கட்டடத்தில் நூற்றுக்கணக்கானோர் சிக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடத்தில், தீயை அணைக்க தீயணைப்பு படையினர் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதலில், இந்த கட்டடத்தில் கிட்டதட்ட 100 பேர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், 60 பேர் மாலை 5.45 மணிக்கு பத்திரமாக வெளியே கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, தீவிபத்து பற்றி அறிந்தவுடன் 3 மணி நேரமாக போராடி தீயணைப்பு படையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்