“வேண்டாம்” என்று பெயர் கொண்டு, ‘நீ வேண்டும்’ என்று பிறர் சொல்ல உயர்ந்த பெண்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இவர் பெயர் ‘வேண்டாம்’. ‘இவர் வேண்டும்’ என பிறர் கூறுவது ஏன்?

'வேண்டாம்' என பெயர் சூட்டப்பட்ட திருத்தணியைச் சேர்ந்த பெண், கல்வியால் உயர்ந்து,சாதித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி அவரை பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான தூதுவராக நியமித்துள்ளார்.

''பெண் குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்பதற்கு நான் உதாரணமாக இருப்பதாக ஆட்சியர் கூறினார். இனி என் குடும்பத்தில் ஆண் குழந்தை இல்லை என்ற எண்ணம் யாருக்கும் வராது. அதேபோல எங்கள் ஊரில் ஆண் குழந்தை இல்லாத குடும்பங்களில் என்னை பற்றி தெரிந்துகொள்கிறார்கள்.என் குடும்பத்திற்கு பெருமையான தருணம் இது,''என்கிறார் வேண்டாம் என்கிற பெண்.

காணொளி தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: கே.வி. கண்ணன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :