ஜெய்பால் ரெட்டி: அவசர நிலையை எதிர்த்த முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் மரணம்

ஜெய்பால் ரெட்டி படத்தின் காப்புரிமை ANI

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஜெய்பால் ரெட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 77.

1942-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மகபூப்நகர் மாவட்டத்தில் பிறந்த ஜெய்பால் ரெட்டி, இளம் வயதிலேயே அரசியலுக்கு ஈர்க்கப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்திரா காந்தி

ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், 1977-இல் பிரதமராக இருந்த இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்தபோது அதை தீவிரமாக எதிர்த்தார்.

அதனை தொடர்ந்து அவர் ஜனதா கட்சியில் சேர்ந்தார். 1980 நாடாளுமன்ற தேர்தலில் அவர் மேடக் தொகுதியில் இந்திராகாந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

1985 முதல் 1988 வரை ஜெய்பால் ரெட்டி ஜனதா கட்சியின் பொது செயலாளராக இருந்தார். 5 முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட, ஜெய்பால் ரெட்டி இரண்டு முறை மாநிலங்களைவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

மேலும் ஆந்திர சட்டமன்றத்திலும் அவர் நான்கு முறைகள் உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

ஐ.கே. குஜ்ரால் பிரதமராக இருந்தபோது, ஜெய்பால் ரெட்டி மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றார்.

1999-ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெய்பால் ரெட்டி, 2004-இல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற அவர் மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தகவல்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார்.

ஜெய்பால் ரெட்டி இறந்ததையடுத்து, அவரது பணிகளை நினைவுகூர்ந்து புகழாரம் சூட்டிய காங்கிரஸ் கட்சி அவரது மறைவுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :