நீங்கள் சாப்பிடும் வாழைப்பழத்திற்கு எவ்வளவு ஜிஎஸ்டி?

இரண்டு வாழைபழங்கள் படத்தின் காப்புரிமை TWITTER / RAHULBOSE1

இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிட்டதற்கு ரூ. 442.50 பில் வந்ததற்கு எதிராக எதிராக கேள்வி கேட்ட நடிகர் ராகுல் போஸின் பதிவு சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகியது.

சண்டிகரில் அவர் தங்கிய ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து இது பற்றிய இந்த காணொளி பதிவிடப்பட்டது.

இதன் காரணமாக, ஜிஎஸ்டியில் உள்ள சிக்கல் பற்றி சமூக ஊடகங்களில் பெரும் விவாதம் தொடங்கியது.

ஜிஎஸ்டி-யை சேர்ந்து இந்த தொகையை ராகுல் போஸ் செலுத்த வேண்டுமென கூறப்பட்டது.

இதனால் சமூக ஊடகங்களில் பல மீம்களும், நகைச்சுவைகளும் தோன்றிய நிலையில், பழங்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வசூலிக்கலாம்? தங்கும் விடுதிகள் எவ்வளவு ஜிஎஸ்டி வரி வசூலிக்கலாம்? போன்ற கேள்விகள் எழுந்தன.

உணவு பொருட்கள் மீது ஜிஎஸ்டி

உணவகம் ஒன்றில் சாப்பிடும்போது 5% ஜிஎஸ்டி நமது பில்லில் குறிப்பிடப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, ரூ. 100-க்கு சாப்பிட்டிருந்தால், ரூ. 5 ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.

தங்கும் வசதி வழங்குகின்ற விடுதிகளில், பில்லில் 18% கட்டணம் வசூலிக்கப்படலாம். ஆனால், ஒரு நாளைக்கு தங்குகின்ற அறைக்கு ரூ. 7,500-க்கு மேலாக இருக்க வேண்டும்.

நடிகர் ராகுல் போஸ் தங்கிய அறை ஒரு நாளைக்கு ரூ. 7, 500-க்கு அதிகமாக இருந்ததால், அவருக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால், பழங்களும், காய்கறிகளும் ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விலக்கு பெற்றவை என்பதை பார்க்க இந்த ஹோட்டல் தவறிவிட்டது. தவறாக வரி வசூலித்ததற்கு அபராதமாக அந்த ஹோட்டலிடம் இருந்து ரூ. 25,000 வசூலிக்கப்பட்டது.

பழங்கள், காய்கறிகள், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, இறைச்சி, முட்டை, பால் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இறைச்சியை பார்சல் செய்து நிறுவனம் தனது பிராண்ட் மூலம் விற்குமானால் அதற்கு 5% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது.

பதப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்ட உணவு பொருட்களுக்கு இதேபோல 5 அல்லது 12% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது.

கோக்கோ மற்றும் சாக்லெட் பொருட்களுக்கு 18%, குளிர்பானங்களுக்கு 28% ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி உணவுப்பொருட்களுக்கு ஒரு நிவாரணம்

ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்ட தொடக்க காலத்தில், குளிரூட்டிகள் (ஏர்கண்டிசன்) உடைய உணவகங்களுக்கு 18% ஜிஎஸ்டியும், குளிரூட்டிகள் இல்லாத உணவகங்கள் 12% ஜிஎஸ்டியும் விதிக்கலாம் என்று கூறப்பட்டது. நட்சத்திர உணவகங்கள் 28% வரியாக வசூலித்தன.

ஆனால், பின்னர் வரி வசூலிப்பை ஜிஎஸ்டி கவுன்சில் மாற்றியமைத்தது. மாற்றியமைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி வசூலிப்புபடி, எந்தவித உணவகமும் 5% வரி விதிக்கலாம். ஆனால், ஒரு நாளைக்கு அறைக்கு ரூ. 7, 500-க்கு அதிகமாக கட்ணம் வசூலிக்கும் நட்சத்திர ஹோட்டலிலுள்ள உணவகங்கள் 18% வரி வசூலிக்கும்.

ஜிஎஸ்டி முறை அமல் செய்யப்படுவதற்கு முன்னதாக, உணவகம் ஒன்றின் வரி விதிப்பு 14.5% மதிப்பு கூட்டு வரி (வாட் - ஆனால், மாநிலத்திற்கு மாநிலம் இது மாறுபட்டது) 6% சேவை வரி, ஸ்வச்சா ஸ்வச் பாரத் செஸ் மற்றும் கிருஷ் கல்யாண் செஸ் 0.5% ஆகியவை உள்ளடக்கியிருந்தன.

உணவு பொருட்களுக்கு 20% - க்கு மேலான வரி விதிக்கப்பட்டது. இது தற்போது பில்லுக்கு 5% விதிக்கப்படுகிறது. இதனால், வெளியில் சாப்பிட்டால் ஆகும் செலவை கணிசமாக குறைந்துள்ளது.

உணவுக்கு வரி விதித்திருப்பதன் மூலம் ஏற்பட்டுள்ள முதன்மை மாற்றமானது, வரி ஏய்ப்பை தவிர்க்கும் வாய்ப்புக்களை குறைத்துள்ளதுதான். வரி செலுத்தும் அளவுக்கு வியாபாரம் நடைபெற்றதாக காட்டுவதற்கு ஏதுமில்லை என்று வெளிக்காட்டி கொள்வதற்காக சில உணவகங்கள் முன்னதாக செயல்பட்டுள்ளன.

வெளியே சாப்பிடும்போது மக்கள் தாங்கள் செலுத்துகின்ற வரியை எண்ணிபார்ப்பதற்கு இந்த மாற்றம் வகைசெய்துள்ளது.

ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ், ஒருகிணைந்த ஜிஎஸ்டி திட்டத்திலுள்ள உணவகங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வரியை தெளிவாக எழுதி வழங்க வேண்டியுள்ளது. இந்த திட்டம் ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழுள்ள ஓர் அமைப்பாகும்.

இந்த உணவகங்களுக்கு நீங்கள் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியதில்லை. இந்த உணவகங்கள் தங்களுக்கு வருகின்ற மொத்த வருமானத்தில் ஜிஎஸ்டி செலுத்துகின்றன.

விருந்துகள் மற்றும் வெளிப்புற கேட்டரிங் சேவைகளுக்கு உணவுகள் உள்பட 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

மது வகைகளுக்கு வரி எப்படி?

மது ஜிஎஸ்டி-யின் கீழ் வருவதில்லை. மதிப்பு கூட்டு வரி (வாட்) இதற்கு பொருந்துகிறது. மது குடிக்கும் பொது விடுதியில் (பப்) அல்லது மது வழங்கப்படும் உணவகத்தில் அல்லது மதுவகத்தில் சாப்பிடும்போது, உங்களுக்கு உணவுக்கு மற்றும் மதுவுக்கு என்று தனிதனியாக வரி குறிக்கப்பட்டிருக்க வேண்டும். மதுவுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது.

ஆன்லைனில் வாங்கப்படும் உணவு பொருட்களுக்கு என்ன வரி?

வீட்டில் இருந்து ஆன்லைன் வழியாக வாங்கப்படும் உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி பொருந்துகிறது.

வீட்டிற்கு கொண்டு வந்து வழங்கப்படும் சேவையில் கணினி மென்பொருட்களில் (ஆப்) இருந்து ஓர் உணவை தெரிவு செய்தவுடன், உணவு பொருளின் விலை, அதன் ஜிஎஸ்டி மற்றும் கொண்டு வந்து வழங்குவதற்கான கட்டணம் ஆகிய மூன்று விவரங்கள் தோன்றும்.

படத்தின் காப்புரிமை SOPA Images/Getty Images

உணவு பொருட்களின் விலை ஹோட்டலுக்கு சென்று சேருகிறது. ஜிஎஸ்டி அரசுக்கு செல்கிறது. உணவை கொண்டு வழங்கும் கட்டணத்தில் 18% ஜிஎஸ்டி உள்ளடங்கியுள்ளது

தங்கள் வாடிக்கையாளர்கள் அதிகமாக பணம் செலுத்துவதாக உணராமல் இருக்க செய்ய சில கணினி மென்பொருட்கள் (ஆப்) இவற்றை தனிதனியாக பிரித்து காட்டுவதில்லை.

எடுத்துக்காட்டாக, உணவுப் பொருளை கொண்டு வந்து கொடுப்பதற்கான சேவை கட்டணம் ரூ. 25 என்றால், அதில் கொண்டு வந்து கொடுக்கும் கட்டணம் ரூ. 21.9 + ரூ. 3.81 (18% ஜிஎஸ்டி).

ஆனால், சேவை கட்டணம் என்பது வரியல்ல. சேவை கட்டணத்தை சேர்த்து உணவகம் ஒன்று பில் வழங்கினால் நீங்கள் பணம் செலுத்த முடியாது என்று மறுக்கலாம். உணவகம் வழங்குகின்ற சேவைக்கு நீங்கள் செலுத்துகிற தொகைதான் சேவை கட்டணம். இது அரசு விதித்திருக்கும் கட்டணம் அல்ல.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :