காஷ்மீர் சட்டப்பிரிவு 370: ஆர்.எஸ்.எஸ் கனவு, காஷ்மீரி பண்டிட்டுகளின் எதிர்காலம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு

நரேந்திர மோதி படத்தின் காப்புரிமை Getty Images

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

மாநிலங்களவையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ``எங்களுக்கு ஐந்து ஆண்டுகள் அவகாசம் கொடுங்கள். நாட்டில் அதிகம் வளர்ச்சியடைந்த மாநிலமாக காஷ்மீரை நாங்கள் உருவாக்குவோம்'' என்று கூறினார்.

தெளிவான, நேருக்கு நேரான வாதங்களை முன்வைத்த உள்துறை அமைச்சர், காஷ்மீர் குறித்து சமூக ஊடகங்களில், ஊடகங்களில், கருத்தாளர்கள் மத்தியில் கடந்த சில தினங்களாக நிலவி வந்த குழப்பங்கள் மற்றும் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தேர்தல்களைத் தொடர்ந்து பின்விளைவுகள் இருக்கும். அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்பதில் தெளிவான நோக்கத்துடன் ஆளும் பாஜக இருந்து வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

காஷ்மீர் மக்களுக்கு முழுமையான உணர்வுப்பூர்வமான தேசிய ஒருமைப்பாட்டு சிந்தனை ஏற்படாமல் தடுப்பதாக இந்தப் பிரிவு உள்ளது என்பது ஜன சங் சிந்தனையாளர் பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் கருத்தாக இருந்து வந்துள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு கடந்த 72 ஆண்டுகளில், 370வது பிரிவை ரத்து செய்வதற்கு ஆதரவாக மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. மக்கள் மனதில் பிரிவினைவாத சிந்தனையை தூண்டுவதாக அது இருந்து வந்துள்ளது.

அனைத்து அரசியல் கட்சிகளும், அரசுக்கு எதிராக இருந்த கட்சிகள் ஒவ்வொன்றாக அரசியல் வேறுபாடுகளை தள்ளிவைத்துவிட்டு, அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

துணைநிலை ஆளுநர்களுக்கு எதிராகக் கருத்து கூறி வரும், தனி மாநில அந்தஸ்து கேட்டு வரும் ஆம் ஆத்மி கட்சியும், பயங்கரவாதத்தை ஒழித்து புவியியல் ரீதியில் ஒருமைப்பாட்டை உருவாக்கும் அரசின் முடிவுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியுள்ளது.

இது தொடர்பாக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளில் நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்கள் ஒவ்வொரு கட்சியின் நிலைப்பாட்டையும் தெரிவிப்பவையாக உள்ளன. மக்கள் அனைத்தையும் ஆய்வு செய்து வருகிறார்கள் என்று கூறலாம்.

காங்கிரஸ் கட்சியின் தலைமைக் கொறடாவான புவனேஸ்வர் கலிதா தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார். இந்த சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கு தேசிய உணர்வு ரீதியில் தவிர்க்க முடியாதது என்ற நிலையில் இதை காங்கிரஸ் கட்சி எதிர்ப்பது தற்கொலைக்கு சமம் என்று அவர் கூறியுள்ளார்.

நீண்ட காலமாக, ஜம்மு காஷ்மீர் என்பது சர்ச்சையான அல்லது பிரச்சினைக்குரிய பகுதியாக வெளிக்காட்டப்பட்டு வந்துள்ளது. 7 சதவீத நிலப்பரப்பின் பிரச்சினை மிகைப்படுத்தப்பட்டு, ஒட்டுமொத்த மாநிலத்தின் பிரச்சினையாக வெளிக்காட்டப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கோஷங்கள் மற்றும் உரத்த கோஷங்களால் இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளன.

இந்திய சுதந்திரச் சட்டம் 1947-ல் பிரிட்டிஷ் இந்தியாவின் எந்தப் பகுதிக்குமான சுதந்திரம் என்பது பற்றிக் குறிப்பிடவில்லை. ஆனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்ற சுதந்திரமான எல்லைகள் உருவாக்கப் படுவதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

பிரிட்டிஷ் இந்தியாவின் எல்லைக்கு உள்பட்ட பகுதிகள், சுயராஜ்ஜியங்கள் மற்றும் அந்த மக்களை இணைத்துக் கொள்வதன் மூலம் இவற்றின் எல்லைகள் உருவாக்கப்படும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

மாமன்னர் ஹரி சிங், சுதந்திரத்துக்கு முன்பு அனைத்து கலந்தாடல்களிலும் பங்கேற்றபோது, சுதந்திரம் பற்றி எந்த உரிமையும் கோரவில்லை. அரசியல்சாசன அமர்வில் சொற்பொழிவாற்றியபோது, ஜம்மு காஷ்மீரில் இருந்து நான்கு உறுப்பினர்கள் பங்கேற்றனர். மற்றவர்களைப் போல மாமன்னர் ஹரி சிங்கும் அரசியல்சாசனத்துக்கு ஒப்புக்கொண்டு ராஜிநாமா செய்தார்.

காஷ்மீரை இந்தியாவுடன் சேர்ப்பதில் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு எப்போதுமே ஒரு தடைக்கல்லாக இருந்து வந்துள்ளது.

`பள்ளத்தாக்கில் நிலைமையை மேம்படுத்துவதற்கு சிறிய பங்களிப்பு செய்வதாக மட்டும் `சிறப்பு அந்தஸ்து' என்பது அமையவில்லை. ஆனால், மாநிலத்தின் மற்ற பகுதிகளை - ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளை - பின்தங்கிய பாதைக்கு இழுப்பதாக அமைந்தது.

காஷ்மீர் பிரச்சினையில் எல்லா பேச்சுவார்த்தைகளும், அந்த மாநிலத்தில் வளர்ச்சி மற்றும் உரிமைகள் குறித்தவையாக இருந்தன. ஸ்ரீநகரில் அதிகாரத்தில் இருப்பவர்கள் இதைப் பயன்படுத்தி, மத்திய ஆட்சியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

படத்தின் காப்புரிமை HINDUSTAN TIMES

நாடாளுமன்றத்தில் அமித்ஷா குறிப்பிட்டதைப்போல, காஷ்மீர் பள்ளத்தாக்கின் எதிர்காலம் மூன்று குடும்பங்களால் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. அதனால் அந்தக் குடும்பங்கள் செழிப்படைந்து வந்தன. ஆனால் சாமானிய மக்களுக்கு எந்தப் பயன்களும் கிடைக்காமல் மறுக்கப்பட்டு வந்தது.

2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நிதி ஆய்வின்படி, மாநிலங்களுக்கான மத்திய திட்ட ஒதுக்கீட்டில் 10 சதவீதம் ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப் பட்டுள்ளது.

ஆனால் 2000 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில், நாட்டின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட உத்தரப்பிரதேசத்துக்கு 8.2 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

காஷ்மீரில் ஒரு நபருக்கு ரூ.91,300 என்ற அளவில் உதவிகள் வழங்கப்பட்ட நிலையில், உத்தரப்பிரதேசத்தில் ஒரு நபருக்கு ரூ.4,300 என்ற அளவில் மட்டுமே உதவிகள் வழங்கப் பட்டுள்ளன.

சிறப்பு சூழ்நிலைகளை குறிப்பிடுவதால் மட்டும், சமத்துவமற்ற இந்த நிலைமைக்கு விளக்கம் சொல்லிவிட முடியாது.

இதுதொடர்பாக தணிக்கையின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மாநில அரசு பதில் அளிக்கவில்லை என்று தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் நிதி முறைகேடுகள் உள்ள நிலையில், பாரபட்சமான செயல்பாடுகளும் பரவலாக உள்ளன.

காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பெண், காஷ்மீருக்கு வெளியே உள்ள மாநிலத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொண்டால் அவருக்கு சொத்து அல்லது வாரிசு உரிமை கிடையாது.

2019 ஏப்ரல் மாதத்தில், சமத்துவம் கோரி ஜம்முவைச் சேர்ந்த வால்மீகி சமுதாயத்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

மக்களிடம் அளிக்கப்படும் விளக்கத்தில், உரிமைகளுக்கான இந்தப் போராட்டம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பெரும்பாலான உணர்வுகள் எல்லாமே காஷ்மீர் பிரச்சினையை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும், பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து காஷ்மீரி பண்டிட்கள் வெளியேற்றப்பட்ட பிரச்சினை குறித்து, மனித உரிமை விஷயத்தில் எதுவும் தெரிவிக்கப் படவில்லை.

அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று பலமாகக் கூறி வந்த பாஜக, மக்கள் உணர்வுகளை சரியான சமயத்தில் பயன்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் பயங்கரவாதச் செயல்கள் குறைந்துள்ளன என்பதை குலாம்நபி ஆசாத்தும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ஆனால், காஷ்மீரில் ராணுவத்தினர் குவிக்கப் பட்டிருப்பதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது முரணாக உள்ளது. பயங்கரவாதத்தை அடக்குவதில் 370வது பிரிவுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லை என்பது தெளிவாகத் தெரிந்துள்ளது.

மாநிலத்தில் உள்ள நிலைமை குறித்து ஒருசார்பான தாக்கத்தை ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் அதிருப்தியான எண்ணத்தை உருவாக்குவதாக இது இருந்துள்ளது.

இது மக்களின் விருப்பமான முடிவு என்று கூறுவது பொருத்தமற்றதாக இருக்கும். பாஜக மற்றும் அதன் முன்னோடி அமைப்பான ஜன சங் ஆகியவை, ஆட்சியில் இல்லாத சமயங்களில் கூட 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தன.

படத்தின் காப்புரிமை Getty Images

இன்றைக்கு அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளதைப்போல, மாநில கட்சிகள் இந்த முடிவை எதிர்த்து வழக்கு தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

ஆனால் நிறைய ஆலோசனைகளுக்குப் பிறகு, சட்ட ஆலோசனைகள் பெற்ற பிறகு தான் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கும் என்பது நிச்சயம். எனவே உச்சநீதிமன்றத்தில் இதற்கு ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

நிறைவாக, நீண்ட காலமாக தேவைப்பட்ட ஒரு முடிவாக இது உள்ளது. இதற்கு அரசியல் உறுதியும், தைரியமும் தேவைப்பட்டது. இதை அமல்படுத்துவதில் இணையற்ற உறுதியும் தேவைப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :