நீலகிரி மாவட்டத்தில் கன மழை, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் கன மழை, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தென் மேற்கு பருவமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையை ஒட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது.

நீலகிரி, கோவை, வால்பாறை ஆகிய பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக அதிக அளவு மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.

வழக்கமாக ஜீன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் வரை நான்கு மாதங்களுக்கு தென் மேற்கு பருவமழை இருக்கும்.

ஆனால், இந்த வருடம் ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் சற்று தாமதமாக தொடங்கிய பருவமழை சரிவர பெய்யவில்லை. அவ்வப்போது மிகக் குறைந்த அளவு மழை மட்டுமே இருந்தது.

கடந்த ஐந்து நாட்களாகத்தான் பருவமழை மீண்டும் தொடங்கியுள்ளது. சீரான இடைவெளியில், பெய்யும் பருவமழை தற்போது ஒரே நேரத்தில் அதிகமாக பெய்துவருகிறது.

நீலகிரி மலைப்பகுதியில் உள்ள அவலாஞ்சியில் 24 மணி நேரத்தில் 820 mm மழை பதிவாகியுள்ளது.

நான்கு நாட்கள் கனமழையால் ஸ்தம்பித்தது கூடலூர்

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீலகிரியில் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

தற்போது, பொள்ளாச்சி அருகே வால்பாறையில் கன மழை பெய்கிறது .சின்னக்கல்லாரிலிருந்து அதிக அளவில் வெள்ளம் வருவதால் மேல் நீராரு மற்றும் கீழ் நீராரு அனணயிலிருந்து சோலையாறுக்கு செல்லும் டணால்களின் முழு கொள்ளவை எட்டி உபரி நீர் 10.30,மணி அளவில் கீழ் நீராரிலிருந்து 4000 கன அடி நீர் கேரளாவுக்கு திறக்கப்பட்டது.

வாழை தோட்டம், ஸ்டேன் மோர் எஸ்டேட் அருகே உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருகில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

நீலகிரி மலைப்பகுதியில் அமைந்துள்ள கூடலூரிலும் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி கூடலூரில் 24 மணி நேரத்தில் 241 மிமீ மழையும், அருகில் உள்ள தேவாலாவில் 210 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

தொடர் கனமழையின் காரணமாக இந்தப் பகுதிகளில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் நெடுஞ்சாலையில் மண்சரிந்தும், மரங்கள் விழுந்தும் கிடப்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் உள்ள வீடுகள் பலவற்றிலும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: