அருண் ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி - ஜேட்லியை பார்வையிட வந்த பிரதமர் மோதி

முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி படத்தின் காப்புரிமை Getty Images
Image caption முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி

முன்னாள் நிதி அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான அருண் ஜேட்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மூச்சுத் திணறல் பிரச்சனை காரணமாக அருண் ஜேட்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவரை பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோர் வந்து பார்த்துள்ளனர்.

அருண் ஜேட்லியின் ரத்த ஓட்டம் சீராக உள்ளது என எய்ம்ஸ் மருத்துவமனை கூறியுள்ளது.

66 வயதான அருண் ஜேட்லி மோதியின் கடந்த அமைச்சரவையில் நிதி அமைச்சர் பொறுப்பு வகித்தார்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பல முறை இவரது பொறுப்பு பியூஷ் கோயலுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

இந்தாண்டு தொடக்கத்தில் அவர் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதால், அவரால் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் முடியவில்லை.

மே மாதம் மீண்டும் மோதி வெற்றி பெற்றபோது, தமக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் எந்த பொறுப்பும் வேண்டாம் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார் ஜேட்லி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்