"பழம் நழுவி பாலில் விழாமல் கீழே விழுந்துவிட்டது" - அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

இன்று இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி - 'அடுத்தமுறை பழம் பாலில் விழும்'

"வேலூர் தொகுதியை பொறுத்தவரை அ.தி.மு.க.தான் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. பணத்தை நம்பி வெற்றி பெற்று உள்ளது. தி.மு.க. பெற்றது மோசமான, மோசடியான வெற்றி. கடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 2 அல்லது 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசம் வாங்கினார்கள்" என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த குறுகிய காலத்தில் ஏற்பட்ட மாற்றம் என்றால் தி.மு.க. தேய் பிறையாக போய்க்கொண்டு இருக்கிறது. அ.தி.மு.க. வளர்பிறையாக உள்ளது.

அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்தால் அது நடக்காது. கூட்டணி தர்மத்தின்படி எல்லா கட்சியினரும் வந்து உழைத்தார்கள். எல்லோருடைய உழைப்பால்தான் அ.தி.மு.வுக்கு மகத்தான வாக்குகள் கிடைத்தது.

வேலூர் தொகுதியில் பழம் நழுவி பாலில் விழாமல் கீழே விழுந்துவிட்டது. அடுத்தமுறை நிச்சயமாக பழம் பாலில் விழும் என்று அவர் கூறியதாக அந்த செய்தி விவரிக்கிறது.

தி இந்து - காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர்

படத்தின் காப்புரிமை congress

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகியுள்ள நிலையில், அக்கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணிகளை காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று தொடங்கவுள்ளது.

இதற்காக பிரதேச காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சிறிய குழுக்கள் அமைக்கப்பட்டு ஆலோசனை நடத்தப்படும் என்று தி இந்து செய்தி தெரிவிக்கிறது.

வைகோ - காங்கிரஸ் கடும் மோதல்: காஷ்மீர் தொடர்பான நாடாளுமன்ற உரை

முகுல் வாஸ்னிக், மல்லிகார்ஜுன கார்கே, சச்சின் பைலட், ஜோதிராத்திய சிந்தியா உள்ளிட்டோர் தலைவர் பதவிக்கு பரிசீலனை செய்யப்படுவதாக கருதப்படுகிறது என்று அந்த செய்தி விவரிக்கிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - செல்ஃபி எடுக்க 100 ரூபாய்

மதிமுகவுக்கு நிதி திரட்டும் முயற்சியாக, 100 ரூபாய் கொடுத்தால் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ உடன் செல்ஃபி எடுக்கலாம் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

மேடையில் வைகோவுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்வதற்கு பதிலாக 100 ரூபாய் நிதி கொடுத்தால் உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்