ஜம்மு காஷ்மீர் அரசு: 'ஒரு புல்லட்டைக் கூட நாங்கள் பயன்படுத்தவில்லை'

Kashmir படத்தின் காப்புரிமை Pacific Press

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யபட்டு, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்திய நிர்வாகத்தின்கீழ் உள்ள காஷ்மீரில் போராட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளியன்று வீதிகளில் திரண்ட நிலையில், அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆறு நாட்களில் காவல்துறை ஒரு புல்லட்டைக்கூட சுடுவதற்காக பயன்படுத்தவில்லை என்று ஜம்மு காஷ்மீர் காவல்துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலியான மற்றும் உள்நோக்கங்களைக் கொண்ட செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை இயக்குநர் வேண்டுகோள் விடுப்பதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

படத்தின் காப்புரிமை SOPA Images

வெள்ளியன்று நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்களைக் கலைக்க காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டதையும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியத்தையும் அப்போது களத்தில் இருந்த பிபிசி செய்தியாளர்கள் கண்டனர்.

அதற்கான காணொளி இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க குவிவதாகவும், பல கடைகள் திறந்திருந்ததாகவும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளதாக அகில இந்திய வானொலி செய்தி வெளியிட்டுள்ளது. எந்த மாவட்டத்திலும் எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை என்றும் அரசின் செய்தி தெரிவிக்கிறது.

தலைநகர் ஸ்ரீநகர் இயல்பு நிலையில் இருப்பதாகக் காட்டும் காணொளி ஒன்றையும் ஜம்மு காஷ்மீர் அரசு சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

இந்தக் காணொளியில் உண்மைத் தன்மையை பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய இயலவில்லை.

மக்கள் முதிர்ச்சியுடன் நடந்துகொண்டு, காவல்துறை மற்றும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக ஸ்ரீநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இம்தியாஸ் ஹுசேன் ட்விட்டரில் பதிவிட்டுளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்