சொமேட்டோ மீண்டும் சர்ச்சையில் சிக்கியது - 'மத நம்பிக்கை புண்படுகிறது'

Zomato படத்தின் காப்புரிமை Getty Images

மீண்டும் சொமேட்டோ நிறுவனம் டிரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது.

பன்றி மற்று மாட்டிறைச்சியை டெலிவரி செய்ய முடியாது என்று கூறி மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருக்கும் சொமேட்டோ டெலிவரி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்து இருக்கிறார்கள்.

ஊழியர்கள், " சிலர் மாட்டிறைச்சியும், பன்றி இறைச்சி உணவுகளையும் ஆர்டர் செய்கிறார்கள். ஆனால், இது, கொண்டு செல்பவரின் மத நம்பிக்கைகளைப் புண்படுத்துகிறது" என்று கூறி அவர்கள் இந்தப் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.

சில தினங்களுக்கு முன்பு சொமேட்டோ ஆப்பில், ஒருவர் உணவு ஆர்டர் செய்தார். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் உணவைக் கொண்டு வருவதாக நோட்டிஃபிகேஷன் வர, அதை வாங்க மாட்டேன் என்று தனது ஆர்டரை ரத்து செய்தார்.

இதற்கு பதில் அளித்த சொமேட்டோ நிறுவனம், "உணவுக்கு மதம் இல்லை. உணவே மதம்" என்றது.

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும் சொமேட்டோவின் நிறுவனர், "இந்தியாவின் மதிப்பீடு மீதும் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளிகள் (உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள்) ஆகியோரின் பன்முகத்தன்மை குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் விழுமியங்களை இழந்துவிட்டு எங்களுக்கு கிடைக்கும் லாபத்தை இழப்பதில் எங்களுக்கு எந்த விதமான வருத்தமும் இல்லை," என்று ட்வீட் செய்திருந்தார்.

இதற்காக சமூக ஊடகங்களில் பலர் சொமேட்டோவை பாராட்டினார்கள்.

இப்படியான நிலையில் சில உணவு வகைகளை டெலிவரி செய்ய முடியாது என்று அந்நிறுவன ஊழியர்கள் கூறி இருப்பது விவாத பொருளாக மாறி உள்ளது.

படத்தின் காப்புரிமை Twitter

சொமேட்டோவின்விளக்கம்

சொமேட்டோ நிறுவனம், " இந்த பணியின் இயல்பு குறித்து எங்கள் ஊழியர்களுக்கு ஐயத்திற்கு இடமின்றி விளக்கி இருக்கிறோம். எங்கள் ஊழியர்களுக்கும் இது குறித்து தெரியும். ஹவ்ராவில் ஒரு சிறு குழுதான் இப்படி கவலை எழுப்பி உள்ளார்கள். நாங்கள் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறோம்," என விளக்கி உள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்