"பாதுகாப்புப் படைகளின் தலைவர் என்ற பதவி உருவாக்கப்படும்" - சுதந்திர தினத்தில் மோதி

நரேந்திர மோதி படத்தின் காப்புரிமை Getty Images

பாதுகாப்புப் படைகளின் தலைவர் என்ற ஒரு பதவியை தமது அரசு உருவாக்கும் என்று தமது சுதந்திர தின உரையில் தெரிவித்தார் பிரதமர் மோதி.

இந்தப் பதவி, முப்படைகளுக்கு இடையில் ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, திறமையான தலைமையை வழங்கும் என்று அவர் அப்போது கூறினார்.

இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்து பிரதமர் நரேந்திர மோதி பேசும்போது அவர் இதைத் தெரிவித்தார்.

இரண்டாவது முறையாக தங்கள் அரசு பதவி ஏற்று 70 நாள்களுக்குள் சட்டப்பிரிவு 370ஐ நீக்குவது, முத்தலாக் தடை உள்ளிட்ட பல முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் மோதி தெரிவித்தார்.

காஷ்மீர் குறித்து பேசிய மோதி, " சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏவை ரத்து செய்தது மூலம் சர்தார் வல்லபாய் படேலின் ஒருங்கிணைந்த இந்தியா என்ற கனவை நனவாக்கி உள்ளோம்" என்றார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்

ஒரு நாடு, ஒரு வரி என்ற கனவுக்கு ஜி.எஸ்.டி. உயிர் கொடுத்தது. மின்சாரத் துறையிலும் ஒரு நாடு ஒரு தொகுப்பு என்ற திட்டம் நிறைவேற்றப்பட்டது என்று கூறிய பிரதமர் மோதி, நாடு முழுவதற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது பற்றி இந்தியா தற்போது பேசிவருகிறது. அது நல்ல விஷயம் என்று பேசினார்.

"குடும்பக் கட்டுப்பாடுதான் தேசபக்தி"

இன்று செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து மக்கள் தொகைப் பிரச்சனை பற்றி நான் பேச விரும்புகிறேன் என்று பேசிய மோதி, தங்கள் குழந்தைகளின் கனவுகளையும், அபிலாஷைகளையும் நிறைவேற்ற அவர்களால் முடியுமா என்பது பற்றி ஆழமாக சிந்திக்கவேண்டும். மக்கள் தொகைப் பெருக்கம் பற்றி பெரிய அளவில் விவாதமும், விழிப்புணர்வும் தேவை. முறையாக குடும்பக் கட்டுப்பாடு செய்தால், சிறிய குடும்பங்களால் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக, மன நிறைவோடு இருக்க முடியும் என்பதைப் பார்க்க முடியும்" என்று பேசிய மோதி, மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கைகோர்த்து செயல்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நரேந்திர மோதி

சமூகத்தின் ஒரு பகுதி குடும்பக்கட்டுப்பாட்டில் நம்பிக்கை வைத்துள்ளது. அவர்களுக்கு நாம் நன்றியுடன் இருக்கிறோம். அவர்கள் தங்கள் குழந்தைகளின் குழந்தைகளின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறார்கள். நம் குழந்தைகளின் எதிர்காலம் சமூகத்தை சார்ந்திருக்க முடியாது. குடும்பக் கட்டுப்பாட்டின் மூலம் நாட்டின் மீதான அன்பை ஒருவர் காட்டமுடியும். அதுதான் உண்மையான தேசபக்தி. அத்தைய குடும்பங்களை நாம் மதிக்கவேண்டும்.

படத்தின் காப்புரிமை Getty Images

நரேந்திர மோதி பேச்சின் சில முக்கிய அம்சங்கள்

முத்தலாக்கை சதி என்ற உடன்கட்டை ஏறும் பழங்கால வழக்கத்துடன் ஒப்பிட்டு பேசினார் மோதி. முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களுகளுக்கு நீதியை வழங்கும் என்று அவர் கூறினார். மேலும் அவர் கூறிய சில தகவல்கள்:

  • விவசாயிகள் நலனுக்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம். குறைந்தப்பட்ச ஆதரவு விலை, ஓய்வூதியம் வழங்கி இருக்கிறோம்.
  • தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண ஜல்சக்தி அமைச்சகத்தை அமைத்துள்ளோம்.
  • ஆதிவாசிகள், சிறுபான்மையினர் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினரின் ஒருங்கிணைத்த வளர்ச்சிக்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
  • 2013- 14 தேர்தலின் போது, அனைவரும் நினைத்தார்கள் இந்த நாட்டை மாற்ற முடியுமா?. தேர்தல் வெற்றிக்கு பின் 5 ஆண்டுகள் நாங்கள் கடுமையாக பணியாற்றினோம். ஒட்டுமொத்த நாடும் எங்கள் பணியை பார்த்தது. எல்லாருக்கும் இந்த நாடு மாறும் என நம்பிக்கை வந்தது. இப்போது தங்களாலேயே மாற்றம் கொண்டு வர முடியும் என தனிநபர்கள் நம்புகிறார்கள்.
  • காஷ்மீர் குறித்து பேசிய மோதி, "காஷ்மீர் பெண்களுக்கான உரிமை இனி கிடைக்கும்.அங்குள்ள தலித் சகோதரர்களுக்கு, துப்புரவு தொழிலாளர்களுக்கு என அவர்களுக்கு உரிய உரிமை அவர்களுக்கு கிடைக்கும்."

காஷ்மீரில் உரிமை

காஷ்மீர் குறித்து பேசிய மோதி, "காஷ்மீர் பெண்களுக்கான உரிமை இனி கிடைக்கும். அங்குள்ள தலித் சகோதரர்களுக்கு, துப்புரவு தொழிலாளர்களுக்கு என அவர்களுக்கு உரிய உரிமை அவர்களுக்கு கிடைக்கும் என்றார்.

மேலும் முத்தலாக் சட்டம் பற்றி பேசிய மோதி அது முஸ்லிம் பெண்களுக்கு நீதி வழங்கும் என்றார்.

கிராமப் புறங்களுக்கு குழாய் மூலம் குடிநீர்

ஜல் ஜீவன் மிஷனில் கவனம் செலுத்தி எல்லோருக்கும் தண்ணீர் கிடைப்பதை உத்தரவாதம் செய்வோம். சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை என்பது துரதிருஷ்டம் என்று அவர் பேசினார்.

ஜல்ஜீவன் மிஷன் திட்டத்துக்கு 3.5 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என்று பேசிய மோதி, இதன் மூலம் ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யப்படும் என்றார்.

நீரின்றி அமையாது உலகு என்ற திருக்குறளையும் மேற்கோள் காட்டி அவர் பேசினார்.

"நாம் தேசத்திற்காக வாழ வேண்டிய கால கட்டத்தில் பிறந்திருக்கிறோம். தேசத்திற்காக உயிர் இழக்க வேண்டிய கால கட்டத்தில் இல்லை" - இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.

ப்ளாஸ்டிக் உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு தகுந்த மாற்று தர வேண்டும். அவ்வாறு மாற்று தருவது விவாசாயிகளுக்கு உதவும். நாம் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்து நாட்டிற்கு உதவ வேண்டும்.

நம்முடைய rupay சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ளது. ஆனால் கிராமங்களில் இது வர வேண்டும் என்றார் மோதி.

ரசாயன உரங்களை குறைக்க வலியுறுத்தல்

ரசாய உரங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதனால் பூமியை பாதுகாக்கலாம் என்று அவர் பேசினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்