பாரதிய ஜனதா கட்சி: பௌத்தர்கள் நிறைந்த லடாக்கில் வளர்ந்தது எப்படி?

பெளத்த ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பாஜக எழுந்த கதை படத்தின் காப்புரிமை MONEY SHARMA/Getty Images

பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் லடாக்கில் பாரதிய ஜனதா கட்சி பெருமளவு வளர்ந்துள்ளது.

பாஜகவின் எழுச்சிக்கு இரண்டு கட்டடங்கள் சாட்சி

லேவில் உள்ள ஒரு பழைய பாஜக அலுவலகம், அங்கு இருபது தொண்டர்கள் வந்தால், உட்கார்வதற்கு கூட சரியான இருக்கை ஏற்பாடு இல்லை.

இரண்டு அல்லது மூன்று உடைந்த நாற்காலிகள், ஒரு பழங்கால சோபா மற்றும் பிளாஸ்மா டி.வி ஆகியவை இருக்கின்றன. இதை இப்போது பழுதுபார்க்க தொடங்கிவிடுவார்கள் என்றே தோன்றுகிறது. ஆனால் இங்கிருந்து ஒன்பது நிமிடங்கள் தொலைவில் உள்ள மணாலி நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்ட பாஜக அலுவலகத்தின் பிரமாண்டமான கட்டிடம் கம்பீரமாக நிற்கிறது.

இது ஒரு பெரிய மலையின் ஒரு பகுதியில் கட்டப்பட்டுள்ளது, இதற்கு முன்பு இங்கு எதுவும் இல்லை. பாஜக அலுவலகங்களின் புதிய மற்றும் பழைய கட்டடங்களுக்கு இடையிலான தொலைவு வெறும் ஒன்பது நிமிட பயணம் மட்டுமே... இந்த தேசியக் கட்சியின் எழுச்சியின் கதையின் வயதும் ஒன்பது தான்.

2010 இல் முதல் முறையாக, கவுன்சிலர் தேர்தலில் நான்கு இடங்களில் வென்றது பா.ஜ.க.

ஆனால் வெற்றியின் வரைபடம் மிக விரைவாக விரிவடைந்தது, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 2014 இல், கட்சிக்கு முதல் பாஜக எம்.பியை கொடுத்தது இந்தப் பகுதி.

கடந்த காலத்தில் என்ன நடந்தது?

கடந்த காலம் என்றால் மிகவும் பின்னால் இல்லை, ஆனால் 1989 வரை செல்ல வேண்டியிருக்கும். அப்போது, லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவிக்கக் கோரி இங்கு பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.

மிகவும் சக்தி வாய்ந்த மத அமைப்பன லடாக் பெளத்த சங்கம் '(எல்.பி.ஏ) இந்த போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியது.

எல்.பி.ஏ.யின் வலிமையை விளக்குகிறார், லேவின் பிரதான சந்தையில் உள்ள கடைக்காரர் ஒருவர். ஏதாவது காரணத்திற்காக எல்.பி.ஏ கடைகளை மூடச் சொன்னால், பி.ஜே.பி திறக்க வலியுறுத்தும். ஆனால் இங்கு எல்.பி.ஏவின் பேச்சே எடுபடும், பாஜகவுடையது அல்ல. லடாக் தலைவர்களுக்கு ஒரு 'அரசியல் துவக்கப் பாதையாக' இருந்து வருகிறதுஎல்.பி.ஏ. அது மட்டுமல்ல, பல உயர்மட்ட தலைவர்கள் பலர் எல்.பி.ஏவைச் சேர்ந்தவர்கள் தான்.

எனவே 1989 ஆர்ப்பாட்டங்கள் எல்.பி.ஏ தலைமையில் நடைபெற்றன, அமைப்பின் அதிகாரம் 42 வயதான துப்ஸ்தான் செவாங் என்பவரிடம் இருந்தது. இந்த ஆர்ப்பாட்டங்களில் மூன்று இளைஞர்கள் உயிர் இழந்தனர். எல்.பி.ஏ அவர்களை 'தியாகி' என்று இன்றும் கருதுகிறது.

ராஜீவ் காந்தி அரசாங்கம் இது குறித்து பேச ஒப்புக்கொண்டதால் இந்த ஆர்ப்பாட்டங்கள் 'யூ.டி இயக்கத்தின்' மைல்கற்களாக நிரூபிக்கப்பட்டன. ஆனால் அவர்களது கோரிக்கையான யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கப்படவில்லை, ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு, 'தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில்' என்ற முறையில், ஜம்மு-காஷ்மீர் அரசாங்கத்திலிருந்து வேறுபட்ட ஒன்றைத் தீர்மானிக்கும் உரிமை கிடைத்தது.

உள்ளூர் செய்தித்தாள் 'ரீச் லடாக்' இன் ஆசிரியர் ரிஞ்சன் அங்கமோவின் கூற்றுப்படி, துப்ஸ்தான் செவாங்க், ஒரு மரியாதைக்குரிய மற்றும் பிரபலமான தலைவராக உருவாக்கியது, அவரே இந்த வெற்றிக்கும் காரணம்.

ஹில் கவுன்சில் உருவாக்கப்பட்டபோது, செவாங் அதன் முதல் தலைமை நிர்வாக ஆலோசகரானார், இப்படித்தான் அவர் நிர்வாக-அரசியலுக்கு வந்தார். அவர் தனது அரசியல் வாழ்க்கையின் முதல் நான்கு-ஐந்து ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்திருந்தார்.

ஆனால் யூனியன் பிரதேசமக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. எனவே 2002 ஆம் ஆண்டில், லடாக் யூனியன் பிரதேச முன்னணி, அதாவது எல்.யு.டி.எஃப் என்ற புதிய அமைப்பை அவர் உருவாக்கினார். இதில் பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்டவர்கள் இருந்தார்கள், அவர்கள் அனைவரின் நோக்கம் ஒன்று தான். அது தான் லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றுவது.

இந்த அமைப்புக்கு தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. இரண்டு எம்.எல்.ஏக்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2004 ஆம் ஆண்டில் முதன்முறையாக, துப்ஸ்டன் செவாங் சுதந்திர மக்களவைத் தேர்தலில் எல்.யு.டி.எஃப் தரப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

எல்.யு.டி.எஃப் லடாக் மக்களுக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான பிரச்சாரமாக மாறியது. இந்த அமைப்பு, அனைத்து பொது மக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தது என்று கூறுகிறார் தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவரும், தற்போது முழுநேர பத்திரிகையாளராக பணியாற்றி வரும் செவாங் ரிக்ஸின்.

கதையின் திருப்பம்

எல்.யு.டி.எஃப் அங்கு உள்ளூர் மக்களின் பிரதிநிதி அமைப்பாக மாறியது, அந்த நேரத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் சொல் எடுபடவில்லை.

"எல்.யு.டி.எஃப் 2002 இல் முப்தி முகமது சயீத் தலைமையிலான பி.டி.பி-காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது. காங்கிரசில் இருந்து வந்து எல்.யு.டி.எஃப் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிக்ஜின் சோராவுக்கு 2004 நவம்பரில் மீண்டும் காங்கிரஸ் மீது ஈடுபாடு வந்தது. அவரது அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. சமிக்ஞை தெளிவாக இருந்தது. எல்.யு.டி.எஃப் இன் ஒரு பகுதி உடைந்து காங்கிரசுடன் இணைந்தது. இங்கிருந்து தான், எல்.யு.டி.எஃப் வீழ்ச்சி மற்றும் பாஜகவின் எழுச்சி தொடங்கியது. "

எல்.யு.டி.எஃப் பலவீனப்படுத்தி, லடாக் மக்களை காங்கிரஸ் பிரித்துவிட்டதாக மக்கள் உணர்ந்தனர், இதன் விளைவாக கட்சி அடுத்த கவுன்சிலர் தேர்தலில் 26 ல் நான்கு இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. 22 இடங்களில் எல்யூடிஃப் வெற்றி பெற்றது.

இது காங்கிரசின் பிம்பத்தை களங்கப்படுத்தியது மற்றும் துப்ஸ்தான் சேவாங், காங்கிரஸ் எதிர்ப்பு முகமாக மாறிவிட்டார். இது பாஜகவுக்கு மற்றொரு நன்மையை அளித்தது.

"பா.ஜ.கவிற்கு எல்.யு.டி.எஃப் அமைப்பில் இருந்து தனக்கு லாபம் கிடைக்கும், அதனால் லடாக்கை தனது வசப்படுத்த முடியும் என்று புரிந்துவிட்டது" என்கிறார் ரிக்ஸின்.

அதற்கான களம் தயாராகிக்கொண்டிருந்தது. பல பெரிய தலைவர்கள் வெளியேறியதால் எல்.யூ.டி.எஃப் பலவீனமடையத் தொடங்கியது. 2008 சட்டமன்றத் தேர்தலில் துப்ஸ்தான் செவாங் தோல்வியடைந்தார். 2009 மக்களவைத் தேர்தலில், எல்.யு.டி.எஃப் தேர்தல் களத்தில் கூட இல்லை, கார்கிலின் முகமது ஹசன் தேர்தலில் வெற்றி பெற்றார்

எல்.யூ.டி.எஃப் முடிந்தது

யூனியன் பிரதேசமாக லடாக்கை மாற்றும் கனவை நிறைவேற்ற இனி எல்.யூ.டி.எஃப் உதவாது என்பதை உணர்ந்துக் கொண்ட துப்ஸ்டன் செவாங்கிற்கு ஒரு புதிய சக்தி தேவைப்பட்டது. 2010 இல், மீதமுள்ள எல்.யு.டி.எஃப் தலைவர்களையும் அழைத்துச் சென்று பா.ஜ.க.வில் சேர்ந்தார்.

அப்போது தான், பாஜக முதல் முறையாக லடாக்கில் ஒரு பிரபலமான மற்றும் திறமையான அமைப்பைப் பெற்றது, அதன் பலன் 2010 கவுன்சிலர் தேர்தலில் தெரிந்தது, பாஜக முதல் முறையாக நான்கு இடங்களில் வென்றது.

பின்னர் 2014 மக்களவைத் தேர்தலில் துப்ஸ்தான் செவாங் பாஜக வேட்பாளராக நியமிக்கப்பட்டார். தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது லேவிற்கு வந்த நிதின் கட்கரி, ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களுக்குள் லடாக்கிற்கு யுடி அந்தஸ்து வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, துப்ஸ்தான் தேர்தலில் வெறும் 36 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஜக, தனது முதல் எம்.பி.யை லடாக்கிலிருந்து பெற்றது.

"பாஜகவின் வெற்றிக்கு முக்கிய காரணம், அது லடாக்கிற்கு ஆட்சிக்கு வந்தபின் ஒரு யூனியன் பிரதேசத்தின் அந்தஸ்தைக் கொடுக்கும் என்று வெளிப்படையாகக் கூறியதே" என்று கூறுகிறது ஜம்முவிலிருந்து வெளியாகும் ஸ்டேட் டைம்ஸ் செய்தித்தாளின் லே அலுவலக தலைவர் செவாங் ரிக்ஸின் கூறுகிறார்.

ஆனால் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை, அதனால்தான் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. 2019 மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, ஏமாற்றமடைந்த பாஜக எம்.பி. துப்ஸ்தான் செவாங், தனது எம்.பி. மற்றும் கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், 'தவறான வாக்குறுதிகள் மற்றும் தவறான முடிவுகள்' தான் ராஜினாமா செய்ய காரணம் என்று கூறினார்.

லடாக்கின் ஆரம்ப வெற்றிக்கு பின்னர், துப்ஸ்தான் செவாங்கை எதிர்த்து, செயல்பட்ட பாஜக, தனது தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது என்று சில செய்தித்தாள்கள் மற்றும் செய்தி வலைத்தளங்கள் தெரிவித்தன.

நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட பா.ஜ.க

லடாக் போன்ற மிகவும் முக்கியமான எம்.பி.யின் கைகளிலிருந்து நழுவிப்போனதால், பாஜக பெரும் பின்னடைவை சந்தித்தது.

மத்திய அரசின் மீதான அதிருப்தி அங்குள்ள பாஜக மீதான மனக்கசப்பாகவே தோன்றியது.

எனவே 2019 பிப்ரவரியில், சேதத்தை சரிப்படுத்தும் முயற்சியை பாஜக தொடங்கியது. ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் லடாக்கிற்கு 'யூனியன் பிரதேச அந்தஸ்தை' வழங்கினார்.

லடாக் பெளத்த சங்கத்தின் (எல்.பி.ஏ) தற்போதைய தலைவர் பி.டி.குன்சாங் கூறுகிறார், "ஜம்மு பிரிவு காஷ்மீர் பிரிவைப் போலவே, லடாக் பிரிவிலும் மாற்றத்தை செய்ததால், பிஜேபிக்கு மீண்டும் ஊக்கத்தைக் கொடுத்தது. யூனியம் பிரதேச கனவை பாஜக நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் எழுந்தது. "

மறுபுறம், துப்ஸ்தான் செவாங் கட்சியை விட்டு வெளியேறியதால், 2014 தேர்தலில் அவரது தனிப்பட்ட உதவியாளராக (பிஏ) இருந்த ஒரு இளைஞருக்கு வழங்கப்பட்டது. 34 வயதான ஜம்யாங் செரிங் நம்கியால் 2014 முதல் தீவிர அரசியலில் நுழைந்து 2018 க்குள் மலை கவுன்சிலின் தலைமை நிர்வாக ஆலோசகராக ஆனார்.

லடாக் பிரதேச அந்தஸ்தைப் பெற்ற பிறகு ஜம்யாங் பிரபலமடைந்தார். புதிய எதிர்பார்ப்புகளில் சவாரி செய்த அவர், 2019 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு, மக்களவை வேட்பாளராக மறினார். இந்த முறையும், லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றுவதை பாஜக முக்கிய இலக்காக முன்வைத்தது.

"முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக உள்ல கார்கில் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வேட்பாளர்கள் நின்றதால் முஸ்லிம் வாக்குகள் பிரிக்கப்பட்டன. இதன் பலன் ஜமயாங்குக்கு சென்றது. அவர் தேர்தலில் பெரிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஜமயாங்கின் வெற்றிக்கு பின்னர், பத்திரிகையாளர் முர்தாசா பாசிலி, லடாக்கின் பிரபலமான பத்திரிகையான 'ஸ்டாவா'வில் இவ்வாறு எழுதினார், "லடாக்கில் பாஜகவின் எழுச்சி ஒரு முக்கியமான அரசியல் நிகழ்வு. இப்போது தொடர்ந்து இரண்டு மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. கார்கிலில் இருந்தும் வாக்குகளைப் பெற்றுள்ளது. இது ஒரு பெரிய மாற்றம். பாஜகவின் எழுச்சியால் லடாக்கிற்கு என்ன லாபம்? லடாக்கி பார்வையில் இந்த கட்சியின் சித்தாந்தம் எவ்வாறு வெளிப்படுத்தப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. "

இதற்குப் பிறகு நடைபெற்ற கதை அனைவருக்கும் தெரியும். என்டிஏ அரசாங்கம் லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியது. ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவாக எம்.பி. ஜம்யாங் மாநிலங்களவையில் ஒரு வலுவான உரை நிகழ்த்தினார், இது தேசிய அளவில் விவாதிக்கப்பட்டது, மேலும் அவர் தனது நாடாளுமன்றத் தொகுதியிலும் ஒரு 'ஹீரோ' ஆனார்.

இதற்கிடையில் பாஜகவுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்தது என்று பத்திரிகையாளர் செவாங் ரிக்ஸின் கூறுகிறார்.

தனது கோரிக்கையை நிறைவேற்றாததால் கோபமடைந்து கட்சியில் இருந்து வெளியேறி அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற துப்ஸ்தான் செவாங், பாஜக தொண்டர்களுடன் மகிழ்ச்சியைக் கொண்டாடுவதையும் காண முடிந்தது.

பாஜக தொண்டர்களிடம் அவர் உரையாற்றினார். 72 வயதான துப்ஸ்தான் இனி அரசியலில் தீவிரமாக ஈடுபடமாட்டார் என்று உள்ளூர் பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், லே பாஜக அலுவலகத்தின் புதிய துண்டுப்பிரசுரங்களில், அவர் லடாக் பாஜகவின் 'புரவலர் தலைவர்' என்று எழுதப்பட்டுள்ளது

அவரது புகைப்படங்கள் நரேந்திர மோடி மற்றும் ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோருடன் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

லடாக்கில் ஆர்.எஸ்.எஸ்

இது பாஜக அமைப்பின் விஷயம். ஆனால் பாஜகவின் எழுச்சிக்கு சில பங்களிப்புகளை கொடுத்தது, அதன் தாய் அமைப்பான ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) செயல்பாடுகள் என்று கூறுகின்றனர் சில அரசியல் வல்லுநர்கள்.

மறைந்த கே.சி.சுதர்சன், இந்திரேஷ்குமார், மன்மோகன் வைத்யா போன்ற சங்கத்தின் தேசிய அளவிலான தலைவர்கள் இங்கு வந்தனர்.

இரண்டாவது கருத்து என்னவென்றால், சங்கம் செயல்பாட்டில் இருந்தாலும், அதன் முயற்சிகள் பெருமளவில் இருந்தபோதிலும், பெளத்த பெரும்பான்மை சமுதாயத்தில் இதுபோன்ற மாற்றங்களை ஆர்.எஸ்.எஸ்ஸால் செய்திருக்க முடியாது என்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு மற்றும் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களையும் சேகரித்தோம்.

லேவில், நாங்கள் சில பொது மக்களிடமிருந்து ராஷ்டிரிய சுயம்சேவக் சங்க அலுவலகத்தின் முகவரியைக் கேட்டோம், ஆனால் பதில் கிடைக்கவில்லை. ஏனெனில், சங்கம் இங்கு 'பாண்டே சோகஸ்பா' என்ற பெயரில் செயல்படுகிறது, இதன் பொருள் 'லடாக் கல்யாண் சங்கம்'.

'பாண்டே சோகாஸ்பா' அலுவலகம் தான் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம்

ஹரியானாவைச் சேர்ந்த பிரமித், லேவில் உள்ள சங்கத்தின் மாவட்ட பிரசாரகர் ஆவார். சங்கத்தின் பெயரை மாற்றுவதற்கான காரணத்தை விளக்கிய அவர், "இங்குள்ளவர்களுக்கு சமஸ்கிருத இந்தி புரியவில்லை என்பதால் உள்ளூர் மொழியில் பெயரிட்டுள்ளோம். இதனால் அவர்கள் தங்களை சங்கத்துடன் எளிதாக இணைத்துக் கொள்ள முடியும். "

லடாக்கில் அமைப்பின் துறைசார் பணியாளர் விஜய் செலிங்காவிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, லே மற்றும் கார்கில் மாவட்டங்களில் சங்கத்திற்கு பள்ளிகள் உண்டு. அங்கு, கணினி மற்றும் தையல் மையங்கள் உள்ளன.

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறவிருக்கும் சங்கத்தின் லட்சிய நிகழ்ச்சியான 'சிந்து தரிசனம்' இங்கே.

சிந்து தரிசனம்

சிந்து நதி, லே நகரிலிருந்து பத்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் பாய்கிறது. கடந்த 23 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் ஆர்.எஸ்.எஸ், சிந்து தரிசனம் நிகழ்ச்சியை நடத்துகிறது, இதில் வெளியூர் மற்றும் உள்ளூர் 'பக்தர்கள்' சிந்து நதிக்கரைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கு மக்கள் இந்து பாரம்பரிய வழியில் வழிபடுகிறார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

1997 ஆம் ஆண்டில் சிந்து தரிசனத்தின் திட்டம் தொடங்கியபோது, சேவாங் டோர்ஜே பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்.

"இதற்காக ஒரு ஆவணப்படம் தயாரித்தார்கள். அந்தப் பணியில் நானும் ஈடுபட்டேன். பஞ்சாஜான்யாவின் ஆசிரியர் தருண் விஜயிடம் இதற்கான பொறுப்பு வழங்கப்பட்டது. இந்து என்ற சொல் சிந்துவிலிருந்து வந்தது என்று கூறினார்கள். துணை பிரதமர் எல்.கே.அத்வானி இந்த திட்டத்தின் மீது ஆர்வமாக இருந்தார். சிந்துவிலிருந்து மன்சரோவர் செல்லும் வழியைத் திறப்பதே அதன் தொலைநோக்கு நோக்கம் என்று நினைக்கிறேன் என்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு சிந்து தரிசனம் யாத்திரை சமிதி நேரடியாக ஏற்பாடு செய்துள்ளது, இதன் வழிகாட்டி ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ்குமார். இந்த திட்டம் ஜூன் 23 முதல் 26 வரை செயல்படுத்தப்படுகிறது, ஆண்டுதோறும் அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக இந்திரேஷ்குமார் இங்கு வருகிறார்.

சில குரல்கள் வெளிவந்தன. இது பெளத்த-திபெத்திய கலாச்சாரத்தில் ஊடுருவுவதற்கான முயற்சி என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த திட்டம் உள்ளூர் மக்களிடையே போதுமான அளவு பிரபலமடையவில்லை.

இருப்பினும், ஆர்.எஸெஸ், இந்தப் பகுதியை ஒரு தளமாக உருவாக்கியுள்ளது. உள்ளூர் தலைவர்களையும் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க நபர்களையும் சிந்து தரிசன நிகழ்ச்சியில் இணைந்து பலப்படுத்த முயற்சிக்கிறது. 2021 ஆம் ஆண்டில் சிந்து தரிசனம் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்படும், இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொள்வார்கள் என்று இந்த ஆண்டு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டபோது இந்திரேஷ்குமார் கூறினார்.

சிந்து தரிசனம் நிகழ்ச்சியின் மேடையில், பெளத்தர்களும் முஸ்லிம்களும் இடம் பெறுகின்றனர்.

இந்த நேரத்தில் உள்ளூர் சுன்னி தலைவர் டாக்டர் அப்துல் கயூமும் இந்த நிகழ்ச்சியின் விருந்தினர்களில் ஒருவர்.

லேவைச் சேர்ந்த ஒரு உள்ளூர் பத்திரிகையாளரின் கருத்தின்படி, ஆர்.எஸ்.எஸ்ஸின் நிலை இங்கு மேம்பட்டுள்ளது, ஆனால் அதில் முழுநேர தொண்டர்கள் இல்லை என்று தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் கூறினார், "லடாக் பெளத்த சங்கம் (எல்.பி.ஏ) இருக்கும் வரை ஆர்.எஸ்.எஸ்ஸால் இங்கு பெரியதாக எதுவும் செய்ய முடியாது."

இதற்கிடையில், ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஆகஸ்ட் 24, 2019 அன்று, லடாக்கில் 'இந்தியாவின் கருத்து' என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

மாவட்ட பிரச்சாரகரான பிரமித் பேஸ்புக்கில் அழைப்பிதழைப் பகிர்ந்து கொண்டபோது, உள்ளூர் பத்திரிகையாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

இந்த அழைப்பில் மூன்று முக்கியமான விஷயங்கள் இருந்தன. கெளதம் புத்தரின் புகைப்படம், இந்தியத் தாயின் பாரத் மாதாவின் புகைப்படத்துடன் காணப்பட்டது. 'பாண்டே சோகாஸ்பா' என்பதற்கு பதிலாக, ஆர்.எஸ்.எஸ் என்ற உண்மையான பெயர் பயன்படுத்தப்பட்டிருந்தது.

மூன்றாவது, நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக கலந்துக் கொண்டவர் லடாக் பெளத்த சங்கத்தின் தலைவர் பி.டி.குன்சாங்.

லடாக்கி சமுதாயத்தால் நீண்ட காலமாக ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்த சங்கம், தற்போது தனது முயற்சிகளில் சிலவற்றில் வெற்றிகளைப் பெறுவதாகவும் தெரிகிறது.

"இது நேர்மறையான செய்தியாக இருக்காது. பெளத்த சமூகம் இப்போது ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஆதரவளித்து வருவதைக் காணலாம்" என்கிறார் பத்திரிகையாளர் செவாங் ரிக்ஸின்.

எல்.பி.ஏ மற்றும் ஆர்.எஸ்.எஸ் உறவுகள்

லடாக்கில் இரண்டு மாவட்டங்கள் உள்ளன. பெளத்த பெரும்பான்மை கொண்ட லே ஒன்று. அடுத்தது, ஷியா முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் கார்கில் மாவட்டம்.

லடாக்கில் பெளத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் போதுமான தொடர்பு இல்லை என்று பெயர் வெளியிட விரும்பாத பத்திரிகையாளர் ஒருவர் கூறினார். அதிலும் குறிப்பாக, லே மற்றும் கார்கிலுக்கு இடையே ஒரு தெளிவான வித்தியாசம் உள்ளது, இது யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கப்பட்ட பின்னரும் காணப்பட்டது. "இந்த சமூகங்கள் ஒருவருக்கொருவர் எதிரிகள் என்று சொல்ல முடியாவிட்டாலும். ஆனால் ஒரு வித்தியாசம், பிளவு உள்ளது. இங்குள்ள பெளத்தர்கள் காஷ்மீரி தலைவர்களை விரும்புவதில்லை. லே பிராந்தியத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற தொடங்கப்பட்ட இயக்கத்தின் முக்கிய நோக்கம் அவர்களை அகற்றுவதே ஆகும் என்று அவர் கூறினார்.

படத்தின் காப்புரிமை NAMGAIL

"ஆனால் கார்கிலின் முஸ்லிம்கள் விஷயத்தில் நிலைமை மாறுபட்டது. இந்த வேறுபாட்டைப் பயன்படுத்துவதன் மூலம், எல்.பி.ஏ.வை நெருங்குவதற்கு முயற்சிக்கிறது ஆர்.எஸ்.எஸ்."

இது தவிர, பெளத்த பெண்கள் மற்றும் முஸ்லீம் சிறுவர்களின் திருமணமும் இங்கு ஒரு பிரச்சினையாக உள்ளது.

நாட்டின் பிற பகுதிகளில், முஸ்லீம் இளைஞர்கள், வேறு மதத்தை சேர்ந்த பெண்களை திருமணம் செய்துக் கொண்டால், அதை 'லவ் ஜிஹாத்' என்று ஆர்.எஸ்.எஸ் கூறுவது அனைவருக்கும் தெரிந்த நிதர்சனமான உண்மை. 2017 ஆம் ஆண்டில், லேவைச் சேர்ந்த பெளத்த பெண் மற்றும் கார்கிலைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் இளைஞனின் திருமணம் தொடர்பான சர்ச்சை சர்வதேச ஊடகங்களில் இடம் பெற்றது. ஆர்.எஸ்.எஸ்ஸை சேர்ந்த மாவட்டப் பிரசாரகர் பிரமித் கூறுகையில், "இதுபோன்ற சம்பவங்கள் லடாக்கில் நிகழ்ந்தன, அவை ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு கவலை அளிக்கின்றன." இது எல்.பி.ஏ மற்றும் ஆர்.எஸ்.எஸ்க்கு இடையே உள்ள கருத்தியல் பிரச்சினை.

இந்த திருமணங்கள் பல ஆண்டுகளாக எல்.பி.ஏ.க்கு கவலையளிக்கும் பிரச்சனையாக இருந்தன.

1992 மற்றும் 99 க்கு இடையில், லே மாவட்டத்தைச் சேர்ந்த 28 பெளத்த சிறுமிகள் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலோர் கார்கிலுக்கு 'ஈர்க்கப்பட்டனர்' என்றும் உள்ளூர் பத்திரிகை ஒன்று கட்டுரை வெளியிட்டது.

அதே இதழில், "1989 முதல் 1999 வரை லே நகரில் உள்ள புத்த குடியிருப்பு பகுதிகளில் ஆறு மசூதிகள் கட்டப்பட்டன, 540 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் லேவுக்கு குடிபெயர்ந்தன, அவர்களில் பெரும்பாலோர் கார்கிலிலிருந்து வந்தவர்கள்" என்று கூறப்பட்டிருந்தது.

லேவில்ல் சாலை ஒன்றில் ஜம்முவில் படிக்கும் பெளத்த இளைஞரான தோந்தூப்பிடம் பேசினோம். எல்.பி.ஏவும் இங்கு ஆர்.எஸ்.எஸ் போன்றே செயல்படுகிறது என்று அவர் கூறினார். சமூகத்தில் நலத்திட்டங்களை நடத்தி வரும் அவருக்கும், ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் சில பொதுவான நலன்கள் உள்ளன.

அவற்றைப் பற்றி பேசுவதற்காக எல்.பி.ஏ தலைவர் பி.டி. குன்சாங்கை சந்திக்க மீண்டும் சென்றோம்.

படத்தின் காப்புரிமை Getty Images

அவரது அமைப்பு மேடையில் பேசுவதைப் பற்றி குறித்து நாங்கள் கேட்டபோது, லே மற்றும் நாக்பூர் ஆர்.எஸ்.எஸ்ஸிடம் இருந்து அழைப்பைப் பெற்றதால் அங்கு சென்றதாக அவர் தெரிவித்தார்.

இரு அமைப்புகளுக்கிடையில் ஏதேனும் கருத்தியல் ஒற்றுமை இருக்கிறதா என்று கேட்டால், "ஆர்.எஸ்.எஸ் இங்கே பெரிதாக ஒன்றைச் செய்யும்போது அது பலனளிக்கிறது. அவர்கள் பள்ளிகளை நடத்துகிறார்கள், சிந்து தரிசனம் செய்கிறார்கள். நாங்கள் சிந்து தரிசனத்திற்கும் செல்கிறோம். அவர்களுடன் எங்கள் உறவு மிகவும் வலுவானதாகவோ அல்லது மோசமாகவோ இல்லை. ஆனால் நாங்கள் அவரை மதிக்கிறோம்" என்று சொன்னார்.

கடந்த ஆண்டு புதுடில்லியில் நடத்தப்பட்ட, அர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் கருத்தரங்கில் கலந்துக் கொள்வதற்காக தன்னை அழைத்ததாகவும் பி.டி.குன்சாங் கூறினார்.

"மூன்று நாட்கள் விஞ்ஞான் பவனில் நடைபெற்ற மோகன் பகவத் ஐயாவின் கருத்தரங்கில் கலந்துக் கொண்டோம். அவரைச் சந்தித்தோம். லடாக் வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தோம். கட்டாயம் வருவதாக அவர் சொன்னார், ஆனால் நீங்கள் நாக்பூருக்கு வாருங்கள். நாங்கள் மக்களுக்கு உதவுகிறோம், நீங்களும் அதைத் தான் செய்கிறீர்கள், உங்கள் அமைப்பும் எங்கள் அமைப்பும் ஒன்று" என்று பக்வத் கூறியதாக சொல்கிறார் பி.டி.குன்சாங்.

லடாக்கில், இந்துக்களுக்கும், பெளத்தத்திற்கும் இடையிலான இயல்பான தொடர்பு இருப்பதாக சொல்கிறார் சங்கத்தின் துறைப் பொறுப்பாளர் விஜய் செல்லிங்கா.

அவர் கூறுகிறார், "புத்தரை விஷ்ணுவின் அவதாரம் என்று நாங்கள் கருதுகிறோம். எங்கள் வழிபாட்டு முறை மட்டுமே வேறுபட்டது."

படத்தின் காப்புரிமை Barcroft Media/Getty Images

இருப்பினும், பெளத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் தங்களை இந்து மதத்துடன் இணைத்து பார்க்கிறார்கள் என்பதை எல்பிஏ தலைவர் பி.டி.குன்சாங் ஏற்கவில்லை.

ஒரு பெளத்த துறவியிடம் இது பற்றி கேட்டபோது, இந்துக்களுக்கும் பெளத்தர்களுக்கும் இடையில் ஒரு 'இயற்கையான பிணைப்பு' இருப்பதாக அவர் நிச்சயமாகக் கூறினார். ஏனெனில் இரண்டுமே அமைதியை நேசிக்கும் மதங்கள் என்கிறார் அவர்.

இந்த இயற்கையான சகவாழ்வை வலுப்படுத்தும் பணியை ஆர்.எஸ்.எஸ் செய்து வருவதாகத் தோன்றியது. ஆனால் அது ஒரு குறுகிய பாதையாகும்.

லடாக் மக்கள் தங்கள் அடையாளம், சிறப்பு கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து மிக்க பெருமிதமும், உணர்திறனும் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் கலாச்சாரத்தில் பெரிய தலையீடுகளை விரும்புவதில்லை.

இங்குள்ள மலைகள் உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்றவை அல்ல. இந்த மலைகளில் பசுமை இல்லை, 11 ஆயிரம் அடிக்கு மேல் உயரம், ஆனால் பனி மட்டுமே இங்கு இருக்கிறது, பசுமை அல்ல...

இஞ்சி-எலுமிச்சை தேநீர் குறித்து பத்திரிகையாளர் ஒருவருடன் பேசினேன். "சமவெளியை சேர்ந்த மக்களும் அந்த இடங்களை சேர்ந்த அமைப்புகளும் இங்கு நிலைத்திருக்கும் என்பது உண்மையில் கடினமானதா?" என்று கேட்டேன்.

அந்தத் தேநீரில் தேனைக் கலந்துக் கொண்டே அவர் கூறிய பதில் இதுதான்....பனிப் பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பதிவு சரியில்லை, ஆனால் எல்.பி.ஏவுக்கு ஆக்கப்பூர்வமான பதிவு இருக்கிறது என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: