ஜிடிபி வளர்ச்சி விகிதம்: இந்தியாவில் 5 ஆண்டுகளில் இல்லாத பெரும் சரிவு

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி படத்தின் காப்புரிமை Reuters

2019 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சிவிகிதம், கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய காலாண்டான ஜனவரி - மாரச் காலகட்டத்தில் இருந்த 5.8% விட குறைவாக உள்ளது.

அதேவேளையில், 2018 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ஜிடிபி வளர்ச்சிவிகிதம் 8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது

கடந்த 5 ஆண்டுகளில் இதுதான் மிகவும் மெதுவான வளர்ச்சிவிகிதமாக கருதப்படுகிறது.

கடந்த சில நாட்களாக இந்திய பொருளாதாரம் தொய்வடைந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், இந்தத தரவுகள் வெளியாகி உள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

முன்னதாக, இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகள் இணைப்பு மற்றும் கடன் வசூல் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியிட்டார்.

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு திட்டம் குறித்து விளக்கமாக பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'இன்றைய பொதுத்துறை வங்கிகள் இணைப்பு அறிவிப்புக்கு பிறகு இந்தியாவில் இதுவரை 27 பொதுத்துறை வங்கிகள் இருந்துவந்த நிலை மாறி இனி 12 பொதுத்துறை வங்கிகள் செயல்படும்' என்று குறிப்பிட்டார்.

அண்மையில் இந்திய ரிசர்வ் வங்கி தமது உபரி நிதியில் இருந்து மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் பணம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்