“இந்திய ராணுவத்தால் சித்ரவதை செய்யப்பட்டோம்”
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காஷ்மீர்: அட்டூழியங்கள் என குற்றச்சாட்டு - மறுக்கும் ராணுவம்

இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீரில் சுதந்திரமாக நடமாட, முன்னெப்போதுமில்லாத வகையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தற்போது இருபத்து ஆறாவது நாளாக நீடிக்கின்றன.

அந்த பிராந்தியத்துக்கான பகுதியளவு அந்தஸ்தை இந்திய அரசு தன்னிச்சையாக திரும்பப்பெற்றது முதல், மிகப்பெரிய அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், போராட்டக்காரர்கள் உட்பட சுமார் மூன்றாயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரே மாநிலத்தில், சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் நோக்குடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.

அந்த பிராந்தியத்தில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக பிரிவினைவாத தீவிரவாதிகளுடன் இந்திய ராணுவம் போராடி வருகிறது.

இந்த நிலையில், கிட்டத்தட்ட தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டு, இந்தியர் அல்லாத பத்திரிகையாளர்கள் காஷ்மீருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், களத்தில் நடக்கும் சம்பவங்கள் பற்றிய தகவல்களும் வெளிவருவது குறைந்து வருகிறது.

இதற்கிடையே, சாதாரண மக்களின் வீடுகளில் நடத்தப்பட்ட நள்ளிரவு சோதனைகளின்போது கொடூரமாக தாக்கப்பட்டும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாகவும் பலரும் கூறுவதை பிபிசி கேட்டறிந்தது.

காஷ்மீருக்குள் அத்தகைய ஓர் இடத்தில் இருந்து இருக்கும் சமீர் ஹாஷ்மி அனுப்பிய இந்த செய்தியில், நீங்கள் காணும் சில காட்சிகள் உங்கள் மனதுக்கு சங்கடத்தை தரலாம் என்று எச்சரிக்கிறோம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: