தாஹில்ரமானி - பதவி விலகிய தலைமை நீதிபதி நீதிமன்றத்திற்கு வரவில்லை; வழக்குகள் மாற்றம்

தாஹில் ரமானி படத்தின் காப்புரிமை facebook

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்த தாஹில்ரமானி இன்று நீதிமன்றத்திற்கு வராத நிலையில், அவருக்குப் பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகள் இரண்டாவது அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன.

சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதியாக இருந்த தாஹில்ரமானியை சமீபத்தில் மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது. இதனை மறுபரிசீலனை செய்யுமாறு தாஹில் ரமானி கோரினார். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே. மிட்டல் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து தனது அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இருந்தபோதும், திங்கட்கிழமையன்று 75 வழக்குகள் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு பட்டியலிடப்பட்டிருந்தன. ஆனால் அவர் நீதிமன்றத்திற்கு வராத நிலையில், அந்த வழக்குகள் வினீத் கோத்தாரி மற்றும் சரவணன் அடங்கிய இரண்டாவது அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன.

இதற்கிடையில் தாஹில்ரமானியின் இடமாற்றத்தைக் கண்டித்து திங்கட்கிழமையன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நாளை - செப்டம்பர் 10 - நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

75 நீதிபதிகளைக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் இந்தியாவின் பழமையான, நான்காவது பெரிய உயர் நீதிமன்றமாகும். மேகாலயா உயர் நீதிமன்றம் மூன்று நீதிபதிகளைக் கொண்ட நாட்டின் மிகச் சிறிய நீதிமன்றங்களில் ஒன்று.

மீண்டும் நிலவுக்குச் செல்லும் NASA - Who will win?

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்