‘ஆபாசமாக  பேசினால்தான் அதிகமாக  பணம் தருவார்கள்’
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

‘ஆபாசமாக பேசினால்தான் அதிகமாக பணம் தருவார்கள்’ - மும்பை பார் நடனக் கலைஞர்களின் கதை

மும்பையில் பிரபலமாக இருந்துவந்த டான்ஸ் பார்கள் எனப்படும் நடனத்துடன் கூடிய மதுவிடுதிகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தடைவிதிக்கப்பட்ட பிறகு அங்கு பணிபுரிந்த பெண்கள் என்ன ஆனார்கள்?

தினமும் நன்கு சம்பாதித்து வந்த இந்த பெண்கள், திடீரென விதிக்கப்பட்ட தடையால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சிலர் பாலியல் தொழிலுக்கு கூட தள்ளப்பட்டனர். சிலர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

டான்ஸ் பார்களில் பணிபுரிந்த சில பெண்களுடன் பிபிசி தமிழ் உரையாடியது.

தாங்கள் ஏன் டான்ஸ் பார் பணிக்கு வந்தோம் என்று விவரித்த இந்த பெண்கள், பொருளாதார தேவைகள் மற்றும் குடும்ப சூழல் ஆகியவையே தங்களின் வாழ்க்கையை தீர்மானித்ததாக குறிப்பிட்டனர்.

டான்ஸ் பார்களில் பணிபுரிந்த பெண்களை சமூகம் எவ்வாறு பார்க்கிறது என்று விவரித்த இந்த பெண்கள், வேறு பணிக்கு சென்றால் தாங்கள் சந்திக்கும் சவால்கள் என்னென்ன என்றும் விவரித்தனர்.

கடந்த 2005-ஆம் ஆண்டில் மஹாராஷ்டிர மாநில அரசு டான்ஸ் பார்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்த நிலையில், இதனை எதிர்த்து வழக்குகள் தொடுக்கப்பட்டன. மஹாராஷ்டிர மாநில அரசும் எதிர்மனு தாக்கல் செய்தது.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு, மும்பையில் டான்ஸ் பார்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்தி கடந்த ஜனவரி மாதத்தில் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இது குறித்த எதிர்பார்ப்புகள் ஒருபுறம் இருக்க, இவர்கள் தங்களின் போராட்டங்களையும், இன்னல்களையும் நினைவுகூர்கின்றனர்.

காணொளி தயாரிப்பு: சிவக்குமார் உலகநாதன், பிபிசி தமிழ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :