யானை ரயில் மோதி பலி: வைரலான புகைப்படம் - கண்ணீர் சிந்தும் சமூக ஊடகம்

யானை படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சித்தரிப்புக்காக கோப்புப் படம்

ரயில் மோதி யானை ஒன்று மேற்கு வங்க மாநிலத்தில் பலியாகி உள்ளது.

மேற்கு வங்கத்தில் ஜல்பைபுரி பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானை மீது ரயில் மோதியது. இதில் யானைக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்குப் போராடியவாறு காயங்களுடன் யானை தண்டவாளத்திலிருந்து நகர்ந்து காட்டுக்குள் சென்றது.

மனதிற்கு சங்கடம் தரும் கட்சிகள் உள்ளன:

இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.

படத்தின் காப்புரிமை Twitter

காடுகளுக்குள் ரயில் செல்லும் போது மெதுவாகச் செல்ல வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.

யானை வழித்தடங்களில் ரயில் தண்டவாளங்கள் உள்ளன. இதன் காரணமாகவே இவ்வாறான விபத்துகள் நடப்பதாகக் கவலை தெரிவித்து இருந்தனர்.

யானை வழித்தடங்களில் செல்லும் இரயில்களை மிகக் கவனமாக இயக்குங்கள் எனக் கோரிக்கையும் வைத்திருந்தனர்.

இந்த சூழலில் நேற்று மாலை அந்த யானை இறந்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

யானை - ரயில் மோதல் - அற்புத தீர்வு கண்ட மாணவர்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
விலங்குகளை விரட்ட விமானங்கள் - யானை - ரயில் மோதல் - அற்புத தீர்வு கண்ட மாணவர்கள்

இயற்கையின் தலைசிறந்த படைப்பு யானை என்பார் பிரிட்டிஷ் கவிஞர் ஜான் டோன். ஆம், பார்க்க பார்க்க அலுக்காத ஜீவன் யானை.

யானைகள் பற்றி பேச எழுத எவ்வளவோ உள்ளன. அத்தனையும் சுவாரஸ்யமானவை. அவற்றில் அடிப்படையான 11 தகவல்களை மட்டும் இங்கே பகிர்ந்துள்ளோம்

யானை மனித மோதல் சுருங்கும் காடுகளால் பெருகும் உயிரிழப்புகள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :