“என் தூக்கத்தில் பேய் பிசாசுகளை பார்ப்பேன்”
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உலக மனநல ஆரோக்கிய தினம்: தூக்கத்தில் பேய் பிசாசுகளை பார்த்தவர் மீண்டது எப்படி? #Mentalhealth

“தூக்கத்தில் இல்லாததை எல்லாம் கற்பனை செய்து கொள்வேன். தூக்கத்தில் பேய் பிசாசுகளை பார்ப்பேன். இதனால் பயம் பற்றிக் கொண்டது. சிறு வயதில் நடந்த சில சம்பவங்களால் நான் பாதிக்கப்பட்டிருந்தேன். பின்னர் ஒரு கட்டத்தில் மனநல மருத்துவரை அணுக முடிவெடுத்தேன்” என்கிறார் கௌஷிக் ஸ்ரீநிவாஸ்.

அதில் இருந்து வெளிவர மிகவும் கடினமாக இருந்ததாக கூறும் கௌஷிக் ஸ்ரீநிவாஸ், இதற்கான மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொண்டார். மனநல ஆலோசனையும் பெற்றார்.

கடந்த ஆண்டு அவரது ஆய்வுக் கட்டுரைக்காக விருதும் பெற்றிருக்கிறார் கௌஷிக் ஸ்ரீநிவாஸ்.

உடல் நலம் பாதிக்கப்பட்டால், உங்களுக்கு என்ன ஆயிற்று என்று விசாரிக்கும் நாம், யாராவது மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினால் ஏன் மேலும் கீழும் பார்க்கிறோம்.

காய்ச்சல் வந்தால் எப்படி மருத்துவரிடம் சென்று மாத்திரை வாங்கி சாப்பிடுகிறோமோ, அதே போலதான், மன நலம் பாதிக்கப்பட்டால் மனநல மருத்துவரை சென்று பார்த்து ஆலோசனை பெறுவது.

அதனை தவறாக அணுகுவதை முதலில் தவிர்க்க வேண்டும் என்கிறார் மனநல மருத்துவர் வந்தனா.

இந்தக் காணொளியில் வருபவர் கட்டடக் கலைஞரான கௌஷிக் ஸ்ரீநிவாஸ். 24 வயதாகும் இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது.

மனநலம் பாதிக்கப்பட்டதாக யாராவது கூறினால் உங்கள் மனதில் தவறாக ஒரு வார்த்தை தோன்றலாம். ஆனால், அப்படி அதனை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்த்துவதற்கே இந்தக் காணொளி.

செய்தியாளர் : அபர்ணா ராமமூர்த்தி

வரைபடம் : புனீத் பர்னாலா

தயாரிப்பு : சுஷிலா சிங்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :