சந்திரயான் - 2 சூரிய கதிர்வீச்சைப் பதிவு செய்ததது: இஸ்ரோ தகவல்

படத்தின் காப்புரிமை ISRO

தினமணி: சந்திரயான் - 2 சூரிய கதிர்வீச்சைப் பதிவு செய்ததது: இஸ்ரோ தகவல்

நிலவை ஆய்வு செய்து வரும் சந்திரயான்-2 ஆா்பிட்டா், சூரியனின் எக்ஸ்ரே கதிா் வீச்சைப் பதிவு செய்து, அளவீடு செய்திருக்கிறது. இந்தத் தகவலை இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

படத்தின் காப்புரிமை Dinamani

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காகக் கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது சந்திரயான்-2 விண்கலம். 48 நாள்கள் பயணத்துக்குப் பின்னர், திட்டமிட்டபடி நிலவின் சுற்றுப்பாதையை விண்கலம் சென்றடைந்தது. இதில், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்யவிருந்த விக்ரம் லேண்டா், கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இருந்தபோதும், விண்கலத்திலிருந்து பிரித்துவிடப்பட்ட மற்றொரு பகுதியான ஆா்பிட்டா், நிலவை 100 கி.மீ. தொலைவிலிருந்தபடி சுற்றி வந்து தொடர்ந்து வெற்றிகரமாக ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆா்பிட்டா், தொடர்ந்து 7 ஆண்டுகள் நிலவைச் சுற்றிவந்து ஆய்வு செய்யும் என இஸ்ரோ அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில், சூரியனின் மேற்பரப்பிலிருந்து பிழம்பாக வெளிவரும் எக்ஸ்ரே கதிர்வீச்சை, ஆா்பிட்டா் பதிவு செய்து அளவீடு செய்திருக்கிறது. ஆா்பிட்டரில் இடம்பெற்றிருக்கும், எக்ஸ்.எஸ்.எம். என்ற கதிர்வீச்சு கண்காணிப்புக் கருவி, சூரியனின் சிறிய அளவிலான எக்ஸ்ரே கதிா்வீச்சை அளவீடு செய்து, பூமிக்கு தகவல் அனுப்பியிருக்கிறது. சூரியனின் எக்ஸ்ரே கதிர்வீச்சைப் பயன்படுத்தியே, நிலவின் மேற்பரப்பில் உள்ள தனிமங்கள் குறித்த ஆய்வை ஆா்பிட்டா் மேற்கொள்ள உள்ளது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்து தமிழ்: லலிதா ஜுவெல்லரி கொள்ளை - முக்கிய குற்றவாளி முருகன் பெங்களூருவில் சரண்

திருச்சி லலிதா ஜுவெல்லரி கொள்ளை வழக்கில் தேடப் பட்டு வந்த முக்கிய குற்றவாளி முருகன் நேற்று பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து அவர் பரப்பன அக்ரஹாரா மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சியில் உள்ள லலிதா நகைக்கடை நகைக் கடையில் கடந்த 2-ம் தேதி அதிகாலை ரூ.13 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து திருச்சி மாநகர போலீஸார் 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

இந்நிலையில், கடந்த 3-ம் தேதி இரவு திருவாரூர் அருகே போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது மணிகண்டன் என்பவரைப் பிடித்தனர். அப்போது அங்கிருந்து தப்பியோடிய சுரேஷ் என்பவர் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒருங்கிணைந்த நீதி மன்றத்தில் சரணடைந்தார்.

இதனிடையே, இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் பெங்களூருவில் தலைமறைவாக இருப்பதாகத் தகவல் வெளியானது. இதனால் பெங்களூரு வந்த தமிழக தனிப்படை போலீஸார் முருகனை வலைவீசித் தேடி வந்தனர். மேலும் கர்நாடக காவல் துறையில் ஐஜியாக இருக்கும் தமிழ் ஐபிஎஸ் அதிகாரி ஹரிசேகரனை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது ஹரிசேகரன், "கடந்த 2015 அக்டோபர் 21-ம் தேதி பெங்களூருவில் தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் முருகன் தனது கூட்டாளிகளு டன் ரூ.3.16 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகளை கொள்ளையடித்தார். இவ்வழக்கில் எனது தலைமையிலான போலீஸாரே முருகனை மடக்கிப் பிடித்தனர். சில மாதம் கழித்து ஜாமீனில் வெளியே வந்த முருகன் தலைமறைவாகிவிட்டார்" என பழைய வழக்கின் வரலாற்றைக் கூறியுள்ளார்.

இந்நிலையில், பெங்களூரு மாநகர 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முருகன் நேற்று சரணடைந்தார். 2015-ம் ஆண்டு நடந்த கொள்ளை வழக்கில் தேடப்படும் குற்ற வாளியான அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி நாகம்மா உத்தரவிட்டார். இதையடுத்து பரப்பன அக்ரஹாரா மத்தியச் சிறையில் முருகன் நேற்று மாலையில் அடைக்கப்பட்டார்.

இவர் மீது கர்நாடக காவல் நிலையங்களில் 80-க்கும் மேற் பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதால் பெங்களூரு போலீஸார் அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர். இதுபோல தமிழக தனிப் படை போலீஸாரும் முருகனை திருச்சிக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், பெங்களூரு மாநகர 11-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முருகன் நேற்று சரணடைந்தார். 2015-ம் ஆண்டு நடந்த கொள்ளை வழக்கில் தேடப்படும் குற்ற வாளியான அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி நாகம்மா உத்தரவிட் டார். இதையடுத்து பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் முருகன் நேற்று மாலையில் அடைக்கப்பட்டார்.

இவர் மீது கர்நாடக காவல் நிலையங்களில் 80-க்கும் மேற் பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதால் பெங்களூரு போலீஸார் அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன் றத்தை நாட முடிவு செய்துள்ள னர். இதுபோல தமிழக தனிப் படை போலீஸாரும் முருகனை திருச்சிக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தினத்தந்தி: பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூடப்படுகிறதா?

படத்தின் காப்புரிமை BSNL

பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூடப்படுகிறது என வாட்ஸ் ஆப்பில் உலவும் வதந்தி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பி.எஸ்.எம்.எல் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் சஞ்சய்குமார் சின்ஹா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூடப்படுவதாக சமீபத்தில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது உண்மையல்ல. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை புதுப்பித்து புத்துயிரூட்டும் வகையில் விருப்ப ஓய்வு, 4 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் பி.எஸ்.என்.எல். சொத்து விற்பனை ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டம் மத்திய அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் எப்போதும் தேசத்தின் சேவையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக இயற்கை பேரிடர் காலங்களிலும், தொலைதூர பகுதிகளிலும் தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவையாற்றி வருகிறது. வருங் காலங்களில் அவ்வாறே சேவையாற்ற உறுதி அளிக்கிறது." என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: டெங்கு காய்ச்சல் 11 மாத குழந்தை பலி

சென்னை திருவாலங்காடு அருகே டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 11 மாத குழந்தை உயிரிழந்தது.

மருதவல்லிபுரம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது 11 மாத குழந்தை நிஷாந்த் கடந்த வாரம் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தது. திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், குழந்தை நிஷாந்த் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

Village Food Factory-ன் முதல் மாத வருமானம் எவ்வளவு தெரியுமா? | Daddy Arumugam Interview

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்