மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பு: சென்னை ட்விட்டரில் டிரெண்டாகும் DontgobackModi ஹாஷ்டேக்

ட்விட்டரில் டிரெண்டாகும் DontgobackModi ஹாஷ்டேக் படத்தின் காப்புரிமை Twitter

சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோரின் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடந்து முடிந்துள்ள சூழலில் சென்னை டிரெண்ட்ஸில் DontgobackModi என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி உள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) Gobackmodi மற்றும் TNwelcomesModi ஆகிய ஹாஷ்டேகுகள் ட்ரெண்டாகின .

நேற்று gobackmodi என்பது சீன மொழியிலும் ட்ரெண்டாகியது. கூகுள் ட்ரான்ஸ்லேட்டரில் gobackmodi என்பதற்கான சீன மொழி பதிவை ஹாஷ்டேகில் பயன்படுத்தினர்.

படத்தின் காப்புரிமை Twitter

இந்த சூழலில் இன்று சனிக்கிழமை DontgobackModi என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகியது.

இந்த ஹாஷ்டேகில் சுமார் 11 ஆயிரம் ட்வீட்டுகள் போடப்பட்டுள்ளன.

இன்று மாமல்லபுரம் கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோதி, அங்குக் கிடந்த குப்பைகளை 30 நிமிடங்களுக்கும் மேலாக அகற்றினார். "நாம் நம்முடைய பொது இடங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வோம்" எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் பிரதமர்.

இதனைப் பகிர்ந்து DontgobackModi ஹாஷ்டேகை டிரெண்டாக்கி வருகின்றனர்.

''நான் ஏன் தமிழ் கற்றேன்"? - சீனப் பெண் நிறைமதியுடன் பிரத்யேக நேர்காணல்

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்