இந்தியாவை சேர்ந்த அபிஜித் பேனர்ஜிக்கு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு

பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் படத்தின் காப்புரிமை The Nobel Prize

இந்திய அமெரிக்கப் பொருளாதார வல்லுநரான அபிஜித் பேனர்ஜிக்கு இந்த வருடத்துக்கான பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அபிஜித் பேனர்ஜியுடன் எஸ்தர் டஃபலோ மற்றும் மைகேல் க்ரெமெருடன் அபிஜித் பேனர்ஜி இந்த பரிசை பகிர்ந்து கொள்கிறார்.

இவர்களின், சர்வதேச வறுமையை ஒழிப்பதற்கான சோதனை அணுகுமுறைக்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அபிஜித் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1981ஆம் ஆண்டு அறிவியல் பட்டப்படிப்பு முடித்தார். அதன்பின் பேனர்ஜி 1983ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்ஏ படித்தார்.

இந்த வருட அறிவுப்புகள்

முன்னதாக 2019ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மதுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

"அமைதியை நிலைநாட்டவும், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும்" நடவடிக்கைகளை எடுத்ததற்காக அபிக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போலாந்தை சேர்ந்த எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸுக் மற்றும் ஆஸ்திரியாவின் பீட்டர் ஹேண்ட்கே ஆகியோருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரீசார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் அயன் பேட்டரிகளை உருவாக்கியதற்காக 96 வயது விஞ்ஞானி ஜான் பி குட் எனாஃப் உட்பட மூவருக்கு 2019-ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரண்டத்தைப் பற்றி முற்றிலும் வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதற்காக மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

Modi எடுத்த இந்த ஒரு முடிவு பொருளாதாரத்தை சீராக்குமா? | FDI Policy | Economy Slowdown

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்