பல திருநங்ககைகளின் வாழ்வில் ஒளியேற்றும் சுதா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

திருநங்கைகள் வாழ்வில் ஒளியேற்றும் சுதா #IamtheChange

(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் நான்காவது அத்தியாயம் இது.)

"என் பெண்மை குணங்கள் நான் ஆறாவது அல்லது ஏழாவது படிக்கும்போது வெளிவந்தன. நான் அதை அப்போதே உணர்ந்துவிட்டேன். அதனை தெரிந்து கொண்ட என் பெற்றோர், என்னை அடித்தார்கள், எனக்கு முடி வெட்டினார்கள், மன நல மருத்துவரிடம் அழைத்து சென்றார்கள். நான் வீட்டை விட்டு வந்துவிட்டேன்" என்கிறார் திருநங்கை சுதா.

ஆந்திராவில் வசதி மிக்க குடும்பத்தில் பிறந்த இவர், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்தார். தற்போது திருநங்கைகளை பார்க்கும் விதம் பரவாயில்லை, சமூகம் சற்று மாறியுள்ளது. ஆனால், முன்பு நிலைமை மிகவும் மோசமாக இருந்ததாக பழைய நினைவுகளை நம்மிடம் பகிர்ந்தார்.

"பெரும்பாலும் திருநங்கைகள் செய்வது, ஒன்று கை ஏந்துவது, இரண்டாவது பாலியல் தொழில்" என்று கூறும் சுதா, தன்னை போன்று யாரும் இந்த கஷ்டங்களை அனுபவிக்கக் கூடாது என்பதற்காக 'தோழி' என்ற அமைப்பை திருநங்கைகளுக்காக தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.

காணொளி தயாரிப்பு: அபர்ணா ராமமூர்த்தி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்