பழங்குடி குழந்தைகளை பள்ளிக்கு வரவழைத்த ஆசிரியர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மகாலட்சுமி: மலைமேல் ஒரு அகல் விளக்காக - பழங்குடி மாணவர்களுக்கு கல்வியளிக்கும் பெண் #iamthechange

(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் ஐந்தாவது அத்தியாயம் இது.)

தனது அன்பால், அரவணைப்பால், ஈடுபாட்டால் ஒரு மலைக்கே வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார் ஆசிரியர் மகாலட்சுமி. ஆம், கல்வி வேண்டாம் என ஒதுங்கி நின்ற, இடைநின்ற ஜவ்வாது மலையை சேர்ந்த பழங்குடி குழந்தைகளை பள்ளிக்கு மீண்டும் அழைத்து வந்ததில் இவரின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஒரு காட்டையே சுமக்கும் விதை குறித்த காணொளி இது.

காணொளி தயாரிப்பு: முரளிதரன் காசிவிஸ்வநாதன்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: கண்ணன். கே வி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்