பிபிசி 100 பெண்கள் 2019 - பெண்கள் கையில் உலகின் எதிர்காலம்

பிபிசி 100 பெண்கள் 2019

"உலகம் முழுவதும் உள்ள பெண்களின் எதிர்காலம் எப்படி இருக்கிறது" என்று இந்த ஆண்டு (2019) பிபிசியின் 100 பெண்கள் கேட்கிறார்கள்.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், 'பிபிசி 100 பெண்கள்' என்ற பெயரில் தத்தமது துறைகளில் சாதித்த, கவனத்தை ஈர்த்த 100 பெண்களின் கதைகளை உலகம் முழுவதுமுள்ள வாசகர்களிடையே பகிர்ந்து வருகிறோம்.

முந்தைய ஆண்டுகளில், ஒப்பனை தொழில்முனைவோர் பாபி பிரவுன், ஐ.நா. துணை தலைமைச் செயலாளர் அமினா முகமது, செயற்பாட்டாளர் மலாலா யூசுப்சாய், தடகள வீராங்கனை சிமோன் பைல்ஸ், சூப்பர்மாடல் அலெக் வெக், இசைக் கலைஞர் அலிசியா கீஸ் மற்றும் குத்துச்சண்டையில் ஒலிம்பிக் சாம்பியனான நிக்கோலா ஆடம்ஸ் உள்ளிட்ட முற்றிலும் வேறுபட்ட துறைகளை சேர்ந்த பெண்களை நாங்கள் அங்கீகரித்துள்ளோம்.

2019ஆம் ஆண்டுக்கான 'பிபிசி 100 பெண்கள்' நிகழ்வின் கருத்துரு, "The Female Future" அதாவது 'பெண்களால் ஆகும் எதிர்காலம்'.

எதிர்காலத்தை கணிக்கும், வடிவமைக்கும் பணியில் ஆண்களின் ஆதிக்கம் மிகுந்து காணப்படுகிறது. இந்நிலையில், "பெண்களின் தலைமையில் செயல்பட்டால் உலகின் எதிர்காலம் எப்படி இருக்கும்" என்ற கேள்வியைதான் நாங்கள் கேட்கிறோம்.

இந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆண்டு இரண்டு சர்வதேச கருத்தரங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. முதலாவது நிகழ்வு கடந்த 17ஆம் தேதி லண்டனில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாவது மற்றும் இறுதி நிகழ்வு டெல்லியில் இன்று (அக்டோபர் 22ஆம் தேதி) நடைபெறுகிறது.

இந்த நிகழ்வுகளுக்காக, அறிவியல், கலை, ஊடகம், பொருளாதாரம், கல்வி, ஃபேஷன், மதம் மற்றும் பல துறைகளின் நிபுணத்துவம் பெற்றுள்ள பெண் எதிர் காலவாதிகளை நாங்கள் ஒன்றிணைக்கிறோம்.

எதிர்காலத்தில் பள்ளிகள் எப்படி இருக்கும் என்ற பார்வை கொண்ட இரானிய தொழில்முனைவோர் முதல், சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளான உலகில் விண்வெளி ஆய்வைப் பார்க்கும் இந்தியப் பொறியாளர் அல்லது பேஷன் துறையில் 3டி பிரிண்டிங்கின் எல்லைகளை ஆராயும் இஸ்ரேலிய வடிவமைப்பாளர் வரை, தத்தமது துறைகளில் வல்லுநரான பெண்கள், இத்துறைகளின் நிலை 2030ம் ஆண்டில் எப்படி இருக்கும் என்ற கணிப்பை வழங்குகிறார்கள்.

இந்த நிகழ்வையொட்டி நடைபெறும் கேள்வி & பதில்கள், பல்வேறு துறைகளை சார்ந்த விவாதங்கள் உள்ளிட்டவற்றில் பார்வையாளர்கள் கலந்துகொள்ள முடியும். அதுமட்டுமின்றி, மெய் நிகர் தொழில்நுட்பத்தில் பல்வேறு விடயங்களை அறியும் வாய்ப்பும் பார்வையாளர்களுக்கு கிடைக்கும்.

100 பெண்கள் 2019 நிகழ்வானது உங்களுக்கு எதிர்காலத்தின் சவால்கள், கவலைகள் மற்றும் நம்பிக்கைகளை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும்.

டெல்லி கருத்தரங்கம்

எப்போது?

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர்

எங்கு?

கோதாவரி ஆடிட்டோரியம், ஆந்திரா அசோசியேஷன், 24-25 லோதி இன்ஸ்டிடியூஷனல் ஏரியா, புது டெல்லி - 110003

காலை (9:00 - 13:00) மற்றும் மதியம் (14:00-17:45) என்ற இரண்டு அமர்வுகள் இந்த நிகழ்வில் இடம்பெற உள்ளன.

நிகழ்ச்சி நிரல்

காலை நிகழ்வுகள்

ஆரண்யா ஜோஹர் - கவிதை, சமத்துவம் மற்றும் எதிர்காலம்

ராயா பிட்ஷஹ்ரி (கல்வி) - எதிர்காலத்துக்கான பள்ளிகள்: பாடங்கள் இல்லை, பள்ளி கட்டடமும் இல்லை. அதிவேக யுகத்தில் கல்வியை மறு கட்டமைப்பு செய்தல்.

சாரா மார்டின்ஸ் டா சில்வா (கருவளம்) - ஆண்களின் மலட்டுத்தன்மை: இதை தீர்க்க முடியுமா? - ஆண்களின் மலட்டுத்தன்மை குறித்த கட்டுக் கதைகளை உடைத்தல்.

சுஷ்மிதா மொஹந்தி (அறிவியல் மற்றும் விண்வெளி) - 21ஆம் நூற்றாண்டில் விண்வெளி விமானம்: உங்களது இருக்கை வாரை எடுத்துவிட்டு சுதந்திரமாக மிதக்கலாம்.

உரையாடல்: மர்லின் வேரிங் மற்றும் சுபலட்சுமி நந்தி (ஊதியமில்லா வேலை) - ஊதியமில்லாத பெண்களின் உழைப்பை வைத்து நாட்டின் பொருளாதாரத்தை கணக்கிட்டால் என்னவாகும்?

டேனிட் பெலேக் (ஃபேஷன்) - ஆடை அலங்காரத் துறையில் 3டி பிரிண்டிங்கும் - அதன் எதிர்காலமும்.

பிற்பகல் நிகழ்வு

நட்டாஷா நோயல் - உடற்கட்டு குறித்த நேர்மையான எண்ணம்.

பாவோலா வில்லேரியல் (நீதி மற்றும் தரவு சமத்துவம்) - நீதித்துறையின் எதிர்காலம்: உலகம் முழுவதும் கணிப்பொறி நிரலாக்கம் நீதித்துறை அமைப்புகளை எவ்வாறு பாதிக்கும்?

கினா ஸுர்லா (மதம்) - உலகை வழி நடத்தும் குழந்தைகள்: உலகளவில் மதங்களின் எதிர்காலம்.

பிரகதி சிங் (பாலியல் மற்றும் பாலின அடையாளங்கள்) - பாலியலுக்கு அப்பால்: அன்பு, குடும்பம், நெருங்கிய உறவுநிலையின் எதிர்காலம்.

ஹேஃபா ஸ்டிரி (வணிகம் மற்றும் தொழில்முனைவோர்) - வட ஆபிரிக்காவில் மெத்த படித்தவர்களின் குடியேற்றத்தை மெய்நிகர் முதலீடு மூலம் எவ்வாறு நிறுத்த முடியும்?

வாசு பிர்ம்லானி (சுற்றுச்சூழல்) - (பெ)ஆண் ஒரு அடியும், மனிதகுலத்தின் பாய்ச்சலும்: முன்னெச்சரிக்கை கோட்பாடு மற்றும் உலக வரலாறு குறித்த பேச்சு.

நந்திதா தாஸ் (திரைத்துறை) - திரைப்படமும் தோல் மோகமும். திரைகளில் பெண்கள் காட்டப்படும் விதம்

*இந்த நிகழ்வு ஒருவேளை மாற்றத்திற்கு உட்படலாம். அதுகுறித்த எல்லா தகவல்களும் இந்த பக்கத்தில் பதிவு செய்யப்படும்.

பிபிசி 100 பெண்கள் என்பது என்ன?

'பிபிசி 100 பெண்கள்' திட்டம் வாயிலாக ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் உள்ள 100 செல்வாக்கு மிக்க மற்றும் ஊக்கமளிக்கும் பெண்களை அடையாளம் கண்டு அவர்களது கதைகளை வெளியிடுகிறோம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்