புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

காங்கிரஸ் வெற்றி

புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 7171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இவருக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பெற்ற என். ஆர். காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் 7612 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜான்குமார் 14,782 வாக்குகள் பெற்று வென்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK

இந்த தொகுதியில் முன்னதாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் வைத்திலிங்கம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றதால் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலோடு புதுவை காமராஜ் நகரிலும் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று காலையில் தொடங்கிய வாக்குப்பதிவில் தொடக்கம் முதலே முன்னணியில் காங்கிரஸ் கட்சியே இருந்துவந்தது. சிறிய தொகுதியாக இருந்ததால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய இரண்டு மணி நேரத்துக்குள் முடிவு அறிவிக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்