மகாராஷ்டிரா, ஹரியாணா தேர்தல் முடிவுகள்: கருத்து கணிப்புகளும், களநிலவரமும்

மகாராஷ்ட்ரா, ஹரியாணா தேர்தல் முடிவுகள்: கணிப்புகளும், கள நிலவரமும் படத்தின் காப்புரிமை Getty Images

தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் பாரதிய ஜனதா கட்சியே வெற்றி பெறும் என்று கூறி இருந்தன.

குறிப்பாக மகாராஷ்டிராவில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 தொகுதிகளில் பாஜக - சிவசேனா கூட்டணியும், 48 தொகுதிகளில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும் என்று நியூஸ் 24 - டைம்ஸ் நவ் ஆகியவற்றின் கணிப்பு தெரிவித்தது.

இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பில், மகாராஷ்டிராவில் ஆளும் கட்சி தலைமையிலான கூட்டணி 166 - 194 தொகுதிகளிலும், எதிர்க்கட்சி 72 - 90 இடங்களில் வெல்லும் என்றும் கூறப்பட்டது.

சிஎன்என் நியூஸ் 18 - ஐபிஎஸ்ஓஎஸ்-இன் கருத்துக்கணிப்பின்படி, 243 தொகுதிகளில் பாஜக கூட்டணியும், 41 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியும் வெற்றிபெறும் என்று கூறப்பட்டது.

Image caption மகராஷ்டிரா காங்கிரஸ் அலுவலம்

ஆனால், இதுவரை வந்த முடிவுகளின் படி, காங்கிரஸ் கூட்டணி தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளில் கூறப்பட்டதைவிட அதிக தொகுதிகளில் முன்னணியில் இருக்கிறது.

ஹரியாணா நிலவரம்

இது மகாராஷ்டிரா நிலவரம் என்றால், ஹரியாணாவிலும் இது போன்ற நிலவரம்தான் நிலவுகிறது.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பின்படி, ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 71 தொகுதிகளில் பாஜகவும், 11 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியா நியூஸ் - போல்ஸ்ட்ராட் கருத்துக்கணிப்பில், ஹரியாணாவில் பாஜக 75-80 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9-12 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று கூறப்பட்டது.

ரிபப்ளிக் டிவி - ஜன் கி பாத்தின் கருத்துக்கணிப்பின்படி, 52-63 தொகுதிகளில் பாஜகவும், 15-19 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றிபெறும் என்று கூறப்பட்டது.

ஏபிபி நியூஸ் - சி வோட்டர் கருத்துக்கணிப்பில், பாஜக 72 இடங்களிலும், காங்கிரஸ் எட்டு இடங்களிலும் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இங்கும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் கூறியதைவிட காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னணியில் இருக்கிறது.

எனினும், இந்த இரு மாநிலங்களிலும் பாஜக கூட்டணி காங்கிரஸ் கூட்டணியைவிட பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: