மினி வாசுதேவன்: ஆதரவற்ற விலங்குகளை அன்போடு பாதுகாக்கும் பெண்ணின் கதை #iamtehchange

(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் ஏழாவது அத்தியாயம் இது.)

"அமெரிக்காவில் நான் பணிபுரிந்த போது விலங்குகள் மீது தொடுக்கப்படும் வன்முறை குறித்து அதிகம் தெரிந்து கொண்டேன். இன்றைக்கு விலங்குகள் ஒரு சந்தைப் பொருளாகவே பார்க்கப்படுகின்றன. உலக அளவில் வணிகம், பொழுது போக்கு, பரிசோதனை, உணவு போன்ற பல காரணங்களுக்காக விலங்குகள் பல்வேறு வகையில் துன்புறுத்தப்படுகின்றன. இந்தியாவில் விலங்குகள் நலன் சார்ந்த சட்டங்கள் வலிமையற்றதாகவே உள்ளன. இதனால், விலங்குகள் மீதான வன்முறை அதிகரிப்பதோடு, விலங்குகளின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது'' - இவ்வாறு கூறுகிறார் மினி வாசுதேவன்.

விலங்குகளின் பாதுகாப்பிற்காகவும், ஆதரவில்லாமல் தெருக்களில் வாழும் நாய் மற்றும் பூனைகளுக்காகவும் 'ஹ்யூமன் அனிமல் சொசைட்டி' எனும் அமைப்பினை உருவாக்கி நடத்தி வருகிறார் மினி வாசுதேவன்.

காணொளி தயாரிப்பு: மு.ஹரிஹரன்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: கு. மதன் பிரசாத்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: