சுஜித் மீட்புப்பணி: "35 அடி தோண்டி இருக்கிறோம். சுஜித்தை உயிருடன் மீட்க முயற்சிக்கிறோம்" - ஓ.பன்னீர்செல்வம்

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
படக்குறிப்பு,

செய்தியாளர்களை சந்திக்கும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியிருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்க தோண்டப்பட்டு வரும் மற்றொரு குழியில் இதுவரை 35 அடிதான் தோண்டியிருப்பதாகவும், இன்னும் 45 அடி தோண்ட வேண்டியுள்ளது என்றும் மீட்புப்பணி பற்றி தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சிறுவன் சுஜித் மீட்புப்பணி நடக்கும் இடத்திற்கு வந்த தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்த போது, இதனை அவர் தெரிவித்தார்.

சுஜித் வில்சன் ஆழ்துளை கிணற்றில் சிக்கி 55 மணிநேரம் கடந்துள்ள நிலையில், இந்தியாவே இந்த சிறுவனின் மீட்புப்பணியை உற்று கவனித்து வருகிறது.

”தண்ணீர் தேவைக்காக தோண்டப்பட்ட இந்த ஆழ்துளை கிணறு, நீரின்றி போனதால் முடப்பட்டது. ஆனால், தற்போது மழை பெய்வதால், மண்ணால் மூடப்பட்டிருந்த இந்த ஆழ்துளை கிணற்றை மூடியிருந்த மண் அகன்றுள்ளது. அப்போது, அங்கு விளையாடி கொண்டிருந்த சுஜித் உள்ளே விழுந்துள்ளான்,” என்று சம்பவத்தை ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு விளக்கினார்.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

மீட்புப்பணி நடைபெறும் இடத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

சுஜித் குழியில் சிக்கிக் கொண்ட தகவலை ஒரு மணிநேரத்தில் மாநில அரசுக்கு தெரிவிக்கப்பட்டவுடன், நடவடிக்கை எடுக்கப்பட்டது. உடனடி மீட்புப்பணி முயற்சிகள் அனைத்தும் பின்னடைவை சந்தித்து விட்டதால், நவீன கருவியை கொண்டு வந்து மீட்புப்பணிகள் தொடர்ந்து வருகின்றன என்று அவர் கூறினார்.

சிறுவன் சுஜித் மீட்கப்பட போவது இப்படிதான்

மத்திய, மாநில பேரிடர் மீட்புக்குழுக்களும், தீயணைப்பு துறையும் இணைந்து மீட்புப்பணியும் மேற்கொண்டு வருவதாகவும், இதுவரை 35 அடிதான் தோண்டியுள்ளோம். இன்னும் 45 அடி தோண்ட வேண்டியுள்ளது. சிறுவனை உயிரோடு மீட்பதற்கான அனைத்து முயற்சியையும் தமிழக அரசு எடுத்து வருவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

படக்குறிப்பு,

புதிதாக வரவழைக்கப்பட்ட ரிக் இயந்திரம்

மேலும், 45 அடி தோண்டுவதற்கு இன்னும் 4 அல்லது 5 மணிநேரம் ஆகலாம் என்று அவர் தெரிவித்தார்.

முதலில் வந்த இயந்திரத்தில் ஒரு மணிநேரத்தில் இரண்டு அடிதான் தோண்ட முடிந்தது என்றும், இப்போது வந்த நவீன இயந்திரம் மூலம் ஒரு மணிக்கு 10 அடிவரை தோண்டலாம் என்றும் அவர் கூறினார்.

எச்சரிக்கை: இந்த காணொளி உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தலாம்

சுஜித் எழுந்து வா தங்கமே ... | Sujith-க்காக மனம் உருகிப் பிரார்த்திக்கும் பிரபலங்கள்

”சிறுவன் சுஜித்தின் பெற்றோர் மிகவும் கவலையோடு உள்ளனர். தமிழகத்தில் நீர் இல்லாமல் பயனின்றி கிடைக்கும் ஆழ்துளை கிணறுகளை இனம்கண்டு, அவற்றை நிரந்தரமாக மூடிவிட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் உறுதி அளித்தார்.

Sujith: ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்ட குழந்தையின் மனநிலை எப்படியிருக்கும்?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :