TamilNaduDay 'தமிழன் என்பதே நம் பெருமை! தமிழராய் தலை நிமிர்வோம்!' - ட்விட்டரில் கொண்டாடப்படும் தமிழ்நாடு

'தமிழர் என்பதே நம் பெருமை! தமிழராய் தலை நிமிர்வோம்!' படத்தின் காப்புரிமை hadynyah

சென்னை மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டு, இன்றுடன் 51 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நவம்பர் ஒன்றாம் தேதியான இன்று தமிழ்நாடு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இதனையொட்டி ட்விட்டரில் #தமிழ்நாடுநாள், #TamilNaduDay, #தமிழ்நாடு64 ஆகிய ஹேஷ்டாகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.

தமிழராக பிறந்ததே தங்களுக்கு பெருமை என்று பலரும் ட்விட்டரில் பதிவிட்டு, இந்திய அளவில் இந்த ஹேஷ்டாகை வைரலாக்கி வருகின்றனர்.

"தமிழராக இருப்பது பெருமை அளிக்கிறது. இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ள மாநிலம் தமிழ்நாடு. நாம் இந்தியராக இருந்தாலும், தமிழர் என்ற உள்ளுணர்வு ஓங்கி இருக்கிறது" என கோகுல்ராஜ் என்ற ட்விட்டர் நேயர் பதிவிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை TWITTER

தமிழ்த்தேசியத்தின் கொள்கைகள் பரவலாகப் பரவத் தொடங்கியதன் விளைவாக, நவம்பர் 1 தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி என தனபாலன் என்பவர் பதிவிட்டுள்ளார்.

"என்ன தவம் செய்தேனோ தமிழ் மண்ணில் பிறந்ததற்காக" என பிரகதி எனும் ட்விட்டர்வாசி பதிவிட்டிருக்கிறார்.

தமிழ் சமூக அரசியல் பொருளாதார விடுதலைக்காக போராடிய தலைவர்களை இந்நாளில் நினைவுகூர்வோம் என்று ராஜசேகர் என்பவர் பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்