கல்வி முறையில் மாற்றம்! - மாணவர்களுக்கு சமவாய்ப்பு அளிக்கும் பெண்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அரசுப் பள்ளி மாணவர்கள் ரோபோடிக்ஸ் படிப்பது எப்போது? #iamthechange

(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் 11வது அத்தியாயம் இது.)

எவ்வித அடிப்படை வசதியும் இன்றி ஊரக பகுதிகளில் இருக்கும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, நகர்புறங்களில் தனியார், தேசிய மற்றும் சர்வதேச பாடத்திட்டங்களில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு நிகரான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதே என் நோக்கம் என்கிறார் சூரிய பிரபா.

அதை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள அவர், அதற்காக லாப-நோக்கமற்ற ‘யூ கோட்’ எனும் நிறுவனத்தை நிறுவியுள்ளார்.

அந்நிறுவனத்தின் மூலமாக தற்காலம் மட்டுமின்றி, எதிர்காலத்துக்கும் தேவையான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

காணொளி தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

.