எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி மேலவலவு கொலையாளிகள் விடுதலை - திருமாவளவன் கூறியது என்ன?

படத்தின் காப்புரிமை Facebook//thirumaofficial

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி ஹிந்து: 'மேலவலவு கொலையாளிகள் விடுதலை'

மேலவலவு கொலையாளிகள் விடுதலை தொடர்பாக தி ஹிந்து நாளிதழில் வெளிவந்த செய்தி:

மேலவலவு கொலை வழக்கில் குற்றவாளிகளான 13 பேர் மதுரை மத்திய சிறையில் இருந்து சனிக்கிழமையன்று விடுதலை செய்யப்பட்டனர்.

1996ல் நடந்த இச்சம்பவத்தில் பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த 13 பேரின் விடுதலையோடு சேர்த்து , இக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பதினாறு பேர் விடுதலையடைந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

2010ல் மற்றுமொரு குற்றவாளியான ஜோதி சிறையிலேயே உயிரிழந்தார்.

யு.பொன்னையா, கே. மணிகண்டன், ஏ. ஆண்டிசாமி, வி.மனோஹரன், என். ரெங்கநாதன், என். சக்கரமூர்த்தி, எம், அழகு, கே. ராஜேந்திரன், பி. சேகர், ஏ. சொக்கநாதன், பி. செல்வம், பி. சின்னாடுங்கன் மற்றும் எஸ். ராமர் ஆகிய 13 பேரையும் நன்னடத்தையின் காரணமாக தமிழக முன்னால் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி விடுதலை செய்யப்பட்டனர்.

மேலவலவு பஞ்சாயத்து தொகுதி தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட்தையடுத்து சாதி இந்துக்கள் கிளர்ந்தெழுந்தனர்.

தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மதுரை மாவட்டம் மேலவலவுக்கு திரும்பும்போது மேலவலவு அருகே சென்னகரம்பட்டி சந்திப்பில் பேருந்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

44 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததில், 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த விடுதலையை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான நடவடிக்கை என தொல். திருமாவளவன் மாநில அரசை கண்டித்துள்ளார்.

தி இந்து தமிழ்: 'பெண்களுக்காக 150 நவீன இ-கழிவறைகள்'

சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கென இ-கழிவறைகள் அமைக்கப்படுவது தொடர்பாக தி இந்து தமிழ் நாளிதழ் வெளியிட்ட செய்தி:

சென்னையில் பெண்களுக்காக ரூ.8 கோடி செலவில் 150 நவீன இ-கழிவறைகளை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

பெண்களுக்கென இ-கழிவறைகள் படத்தின் காப்புரிமை Getty Images

சென்னையில் பயணம் செய்வோருக்கு ஏற்ற வகையிலும், குடிசைப் பகுதிகளுக்கு அருகில் 853 இடங்களில் 6,701 இருக்கைகளை கொண்ட பொதுக்கழிப்பிடங்களை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் அந்த கழிப்பிடங்கள் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் மகளிருக்கான கழிப்பறைகளை அதிகப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

"வெளியில் செல்லும் பொதுமக்கள் தங்கள் இயற்கை உபாதைகளை கழிக்க போதிய இடவசதியின்றி அவதிப்படுகின்றனர். குறிப்பாக ஆண்களை விட, பெண்கள் அதிக சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதனால் அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும், பல்வேறு இடங்களில் ரூ.8 கோடி செலவில் மகளிருக்கான 150 நவீன இ-கழிப்பறைகளை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம்".

"இந்த கழிவறைகளை ஆன்லைனில் கண்காணிக்க முடியும். நீர் இருப்பு, மின் வசதி போன்ற விவரங்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே பெற முடியும். மேலும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த நவீன இ-கழிவறைகள் அமைக்கப்பட உள்ளன".

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: பி.எஸ் கிருஷ்ணன் காலமடந்தார்

சமூகத்தில் பிற்பட்டோருக்காக போராடிய பி.எஸ் கிருஷ்ணன் காலமைந்தார். இது குறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தி:

படத்தின் காப்புரிமை Getty Images

87 வயதான பி. எஸ் கிருஷ்ணன் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்காக போராடியவர். சாதி ஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர் இந்த ஒதுக்கீடுதான் சாதிய சலுகைகளை ஒழிக்கும் என நினைத்தார்.

முன்னால் பிரதமர் வி.பி சிங் அரசில் பொதுநல அமைச்சகம் சில முடிவுகளை நடைமுறைப்படுத்தியபோது தலைமை தாங்கினார்.

பிற்படுத்தப்பட்டோர் வன்முறை தடுப்பு சட்டம் 1989, தேசிய பிற்படுத்தப்பட்டோருக்கான அரசியல் அந்தஸ்து வழங்கியது போன்ற முக்கிய விஷயங்களில் இவரின் பங்கு உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்