புற்றுநோயை அன்பால் வென்ற பெண்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

புற்றுநோயை அன்பால் வென்ற ஐஸ்வர்யா - நம்பிக்கை பகிர்வு #iamthechange

(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் 12வது அத்தியாயம் இது.)

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து வரும் ஐஷ்வர்யா, "அவர்கள் வாழ்க்கை என்றைக்கு வேண்டுமானாலும் முடியலாம். ஆனால் அவர்கள் அதுவரை ஏன் வலியிலும், துயரத்திலும் உழன்று கொண்டிருக்க வேண்டும்." என்கிறார்.

ஒரு முறை புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த குழந்தை ஒரு ஆப்பிள் கேட்டதால் அதை வாங்கிக் கொடுக்க இயலாத அதன் அம்மா அந்த குழந்தையை அடித்துள்ளார். தனது குழந்தைக்குப் புற்றுநோய் வந்த துயரம், ஒரு ஆப்பிள்கூட வாங்கிக் கொடுக்க முடியாத இயலாமை என அனைத்தும் சேர்த்து அந்த குழந்தையை அந்த தாய் அடித்துள்ளார் இதனைப் பார்த்த தனக்கு வாழ்க்கையின் மீது ஒரு பெருங்கோபமே வந்ததாகக் கூறுகிறார் ஐஷ்வர்யா.

காணொளி தயாரிப்பு: விஷ்ணுப்ரியா ராஜசேகர்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு - ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்