வட மாநில குழந்தைகளுக்காக தமிழகத்தில் பள்ளி அமைக்கப்பட்டுள்ளது
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கோவை குப்பைகள் தரம் பிரிக்கும் வளாகத்திற்குள் படிக்காமல் இருந்த வடமாநில குழந்தைகளுக்குப் பள்ளி

வாழ்வாதாரத்திற்காக வடமாநிலங்களில் இருந்து கோவைக்கு குடிபெயர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளலூர் பகுதியில் அமைந்துள்ள குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களின் குழந்தைகள் குப்பைகளில் விளையாடிக் கொண்டும், கல்வி பெறாமலும் வளர்ந்துவந்தனர்.

தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் கீழ், குப்பைகள் தரம் பிரிக்கும் வளாகத்திற்குள்ளேயே 2018 ஆம் ஆண்டில் பயிற்சி மையம் துவங்கப்பட்டு, அக்குழந்தைகளுக்கு தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் ஓவியம் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

குப்பைகளோடு வாழ்ந்துவந்த குழந்தைகள் தற்போது சுத்தமாக பள்ளிக்கு சென்று வருவது அவர்களின் பெற்றோர்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

காணொளி தயாரிப்பு: மு. ஹரிஹரன்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: கு. மதன் பிரசாத்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்