ஜேன்யு மாணவர் போராட்டம்:காவல்துறை தாக்கியதாக புகார்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜே.என்.யு போராட்டம், போலீஸ் தாக்குதல் புகார்: மாணவர்கள் கேட்பது என்ன?

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், தங்கள் விடுதிக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறக் கோரி ஒரு வாரத்துக்கும் மேலாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

நவம்பர் 18ம் தேதி, பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவையும் மீறி, மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.

வலுத்துவரும் போராட்டங்களின் எதிரொலியாக உயர்த்தப்பட்ட விடுதி கட்டணத்தில் 50 சதவீதம் குறைக்கப்படும் என பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது.

ஆனால் அதை ஏற்காத மாணவர்கள் பழைய விடுதி கட்டணத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் .

பிபிசியிடம் பேசிய காவல்துறை இணை ஆணையர் ராந்தவா, மாணவர்கள் மீது காவல்துறை தடியடி எதுவும் நடத்தவில்லை. மாணவர்கள் தடுப்புகளை உடைத்து அகற்றிவிட்டு பேரணியில் ஈடுபட்டதால் காயம் ஏற்பட்டிருக்கும் என கூறினார்.

மேலும் தேர்வு நாட்கள் நெருங்கி வருவதால் , மாணவர்கள் போராட்டத்தை நிறுத்தி விட்டு படிப்பில் கவனம்செலுத்தவேண்டும், தொடர்ந்து போராட்டம் நடத்துவது பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என ஜெ என் யு துணை வேந்தர் ஜெகதீஷ் குமார், காணொளி மூலம் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.காணொளி தயாரிப்பு: பா.காயத்ரி அகல்யா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்