அப்பாவின் அறை ஒரு மாவட்டம்; மகனின் அறை வேறொரு மாவட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அப்பாவின் அறை ஒரு மாவட்டம்; மகனின் அறை வேறொரு மாவட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கருவேப்பிலை பாளையம் கிராமத்தின் பகுதிகள் நான்கு வெவ்வேறு ஊராட்சிகளில் இருக்கின்றன.

இதன் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் நிலையில், தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களும் பிரியும் இடமாகவும் இந்த கிராமம் மாறியுள்ளது.

அந்த வகையில், ஒரே இல்லத்தில் வசிக்கும் தந்தையின் அறை ஒரு மாவட்டத்திலும், மகனின் அறை மற்றொரு மாவட்ட எல்லையிலும் இருக்கின்றன.

காணொளி தயாரிப்பு: நட்ராஜ் சுந்தர், பிபிசி தமிழுக்காக

இச் செய்தியின் வரிவடிவம்: வீட்டின் முன்வாசல் விழுப்புரம், பின்வாசல் கள்ளக்குறிச்சி - ஒரு வீடு; இரு மாவட்டங்கள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்