துணையை தேடி புலியின் நெடுந்தூர நடைப்பயணம் - முழு தகவல்கள்

புலி

இந்தியாவில் இதுவரை பதிவாகாத நெடுந்தூர நடைப்பயணத்தை புலி ஒன்று மேற்கொண்டுள்ளது. ஐந்து மாதங்களில் சுமார் 1,300 கிலோமீட்டர் (807 மைல்கள்) தொலைவை இது நடந்தே சென்றுள்ளது.

இரண்டரை வயதான இந்த ஆண் புலி, இரைக்காகவும், தனக்கு பொருத்தமான இரையை தேடியும், துணைக்காகவும் இவ்வாறு சென்றிருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

ரேடியோ காலர் பொருத்தப்பட்ட இந்த புலி, மகாராஷ்டிராவிலுள்ள தனது தாயகமான வனவியல் பூங்காவை விட்டு கடந்த ஜூன் மாதம் புறப்பட்டது.

நீர்நிலை மற்றும் நெடுஞ்சாலைகள் எனவும், பண்ணைகளுக்கும், பக்கத்து மாநிலத்திலும் இந்த புலி நடந்து சென்றுள்ளது கண்காணிப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புலி ஒரேயொரு முறை மட்டுமே மனிதரை தாக்கியுள்ளது. இது ஓய்வு எடுத்து கொண்டிருந்தபோது, புதர் ஒன்றில் நுழைந்துவிட்ட குழுவிலிருந்து ஒருவரை இது காயப்படுத்தியது.

10 புலிகளின் தாயகமாக விளங்கும் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள திப்பிஷாவார் வனவிலங்கு பூங்காவிலுள்ள பெண் புலியான டி1-க்கு பிறந்த மூன்று புலிக்குட்டிகளில் ஒன்றுதான் சி1 என பெயரிடப்பட்டுள்ள இந்த புலி.

கடந்த பிப்ரவரி மாதம் இதற்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டது. தான் குடியமர்வதற்கு பொருத்தமான இடத்தை கண்டறிவதற்கு பருவகாலம் தொடங்கும்வரை காடுகளில் இந்த புலி அலைந்து திரிந்தது.

ஜூன் மாத முடிவில் வனவிலங்கு பூங்காவை விட்டு புறப்பட்ட இந்த புலி, அது முதல் மகாராஷ்டிராவின் ஏழு மாவட்டங்கள் மற்றும் பக்கத்து மாநிலமான தெலங்கானாவில் நெடும் பயணம் மேற்கொண்டது. வார இறுதியில் மகாராஸ்டிராவின் இன்னாரு வனவலிங்கு பூங்காவில் இந்த புலி இருப்பது தெரியவந்தது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption உலக நாடுகளிலுள்ள 70 சதவீத புலிகள் இந்தியாவில் உள்ளதாக மதிப்பிடப்படுகிறது,

தகவல் தொடர்பை இழக்கலாம் என அச்சம்

இந்த புலி நேர்கோட்டு பாதையில் பயணம் மேற்கொள்ளவில்லை என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு மணிநேரமும் ஜிபிஎஸ் செயற்கைக்கோள் தகவல் தொழில்நுட்பம் மூலம் இந்த புலி கண்காணிக்கப்பட்டது. கடந்த ஒன்பது மாதங்களில் ஐந்தாயிரத்திற்கும் மேலான இடங்களில் இருப்பது பதிவாகியுள்ளது.

தங்குவதற்கான இடம், உணவு மற்றும் தோழியை இந்தப் புலி தேடி சென்றிருக்கலாம். இந்தியாவிலுள்ள புலிகளின் இடங்களில் பெரும்பாலும் நிறைந்துவிட்டதால், பிறக்கின்ற புலிகள் அதிக இடங்களை தேட வேண்டியுள்ளது" என்று இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் மூத்த உயிரியலாளர் டாக்டர் பிலால் ஹாபிப் பிபிசியிடம் தொரிவித்தார்,

பகலில் பதுங்கி, மறைந்திருந்த இந்த புலி, இரவு வேளைகளில் பயணத்தை மேற்கொண்டு உணவுக்காக காட்டுப் பன்றிகளையும், ஆடுகளையும் அடித்து சாப்பிட்டுள்ளது.

இருப்பினும், எந்த விதமான விபத்துக்களை தவிர்க்க இந்தப் புலியை பிடித்து அருகிலுள்ள காட்டில் விட வேண்டியிருக்கும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ரேடியோ காலரின் மின்சக்தி 80 சதவீதம் தீர்ந்து விட்டதால், இந்த புலியோடு இருக்கும் தகவல் தொடர்பை இழக்கலாம் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், புலிகளின் புகலிடங்களும், இரையும் மிகவும் குறைந்துவிட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: