NRC மற்றும் CAA: காந்தியின் விருப்பத்திற்குரியதா? நரேந்திர மோதி கூறியது சரியா? #BBCAnalysis

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோதி, பேசுகையில், இந்த சட்டத்தை எதிர்க்கிறவர்கள் மோதி சொல்வதைக் கேட்கத் தேவையில்லை ஆனால் இது காந்தி விரும்பியது, காந்தியை பின்பற்றுங்கள். குடியுரிமை குறித்து மோதி கூறுவதைத் தான் காந்தியும் சொன்னாரா ?

"சி.ஏ.ஏ-வை எதிர்ப்பவர்கள் அகதிகளின் வலி மீது அமிலம் வீசுவதற்கு சமம். இந்த திருத்த சட்டம் மோதியின் திட்டம் அல்ல; இது மகாத்மா காந்தியின் எண்ணங்களால் ஈர்க்கப்பட்ட ஒன்று. பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வர விரும்பும்போது, அவர்கள் வரவேற்கப்படுவார்கள் என்று காந்தி கூறியிருந்தார். சட்டத்தை எதிர்ப்பவர்கள் மோதியிடம் செவிசாய்க்க விரும்பவில்லை. ஆனால், தனது பெயருடன் காந்தியைக் கொண்டுள்ளவர்கள் குறைந்தபட்சம் காந்தியைப் பின்பற்ற வேண்டும்." என்று டெல்லி ராம் லீலா மைதானத்தில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்துப் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கூறினார்.

குடியுரிமை திருத்த சட்டம் காந்தியின் விருப்பத்திற்குரியதா? நரேந்திர மோதி கூறியது சரியா ?

காந்தியை முழுமையாக நம்பும் ஒருவர் அவரை சந்தித்து அவருக்கு இருக்கும் குறைகளைக் கூறினார். அப்போது காந்தி அவருக்கு அளித்த அறிவுரையில், ''பாகிஸ்தான் அரசாங்கத்திடம் நாம் எந்த தீர்வும் எதிர்பார்க்க முடியாது, செய்த தவறை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நம் சொந்த அமைச்சரவையில் ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், மற்றும் பல நல்ல மனிதர்கள் உள்ளனர். பாகிஸ்தான் அரசாங்கம் சில விஷயங்களில் ஈடுபடுவதை அவர்களால் கூட தடுக்க முடியாவிட்டால், இறுதியில் போரை நாட வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images

எனவே பரஸ்பர நட்பு ரீதியாக நாம் இந்த விஷயங்களைக் கையாளுவோம். இந்துக்களும் முஸ்லிம்களும் நேற்று வரை நல்ல நட்பு பாராட்டி வந்தனர். ஆனால் இன்று எதிரிகள் ஆகிவிட்டோமா? ஒருவரை ஒருவர் நம்பமுடியாத அளவுக்குத் தள்ளப்பட்டுவிட்டோமா? நீங்கள் அவரை ஒரு போதும் நம்ப முடியவில்லை என்றால் இரு தரப்பிலும் போராட வேண்டி இருக்கும்.

நாம் நிதியை எதிர்பார்த்தால், இந்த விஷயம் உங்களிடமோ அல்லது என்னிடமோ இல்லை. அரசாங்கத்திடம் உள்ளது. அரசாங்கத்திடம் நீங்கள் எங்களுக்கு உதவி செய்யத் தான் உள்ளீர்கள் என்பதை அவர்களிடம் சொல்ல வேண்டும். நாம் அவர்களுடன் சண்டை போடுவதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளக்கூடாது. ஆனால் மற்றொரு தரப்பு நம்மிடம் சண்டை போட முயற்சி செய்தால், அதற்கான அழிவை இரு அரசாங்கமும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

பட மூலாதாரம், Getty Images

ஆனால் இருதரப்பிலும் பேசி பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாவிட்டால், வேறு மாற்று யோசனையே கிடையாது. இதற்காகப் போராடி அனைத்து இந்துக்களும் இறக்க நேர்ந்தாலும் நான் வருத்தப்பட மாட்டேன். ஆனால் நீதியின் பாதையை நாம் தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறான பாதையில் அனைத்து இந்துக்களும் முஸ்லிம்களும் உயிரிழக்க நேர்ந்தாலும் நான் கவலைப் படமாட்டேன்.

மேலும் நான்கரை கோடி முஸ்லிம்களும் தேசத்தின் எதிரிகளுக்கு உதவுபவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டால், அவர்களை சுட்டுக் கொள்ளவோ , தூக்கிலிடவோ வேண்டும் அதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை. அதேபோல பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் அந்நாட்டிற்குத் துரோகம் செய்தால், அப்போது அவர்களுக்கும் இதே போன்ற தண்டனை அளிக்கப்படவேண்டும்.

அனைத்து முஸ்லிம்களையும் தேசத்தின் எதிரிகளுக்கு உதவுபவர்கள் என்று நாம் கருதினால், பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் கூட அவ்வாறே கருதப்படுவார்கள் அல்லவா ? அது சரி அல்ல ? அங்குள்ள இந்துக்களும் முஸ்லிம்களும் திரும்பி இங்கு வரவேண்டும் என்று நினைத்தால், நிச்சயம் அவர்கள் இங்கேயே வந்து வாழலாம்.

பட மூலாதாரம், Getty Images

அந்த நிலையில், அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது தான் இந்திய அரசின் முதல் கடமையாகும். ஆனால் அவர்கள் அங்கேயே தங்கி, பாகிஸ்தானுக்கு எதிராக நமக்கு உளவாளியாகச் செயல்படக் கூடாது. அப்படி ஒரு விஷயம் நடக்கவே கூடாது, நானும் அதில் பங்கு வகிக்க மாட்டேன்.'' என்று 1947ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் மற்றும் இந்திய இடையேயான பிரச்சினை குறித்துப் பேசினார்.

அனைவருக்கும் இந்துஸ்தான் சொந்தமானது

ஆனால் ஆகஸ்ட் 8ம் தேதி 1947 ஆம் ஆண்டு, இங்கு பிறந்து வளர்ந்த அனைவருக்கும் இந்துஸ்தான் சொந்தமானது, அவர்களால் வேறு எந்த நாட்டிற்கும் செல்லமுடியாது. எனவே பார்சி, பென்னி இஸ்ரேலி, இந்திய கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், ஹிந்துக்கள் அல்லாதவர்கள் என அனைவருக்கும் இந்தியா சொந்தமானது. சுதந்திர இந்தியாவுக்கு ஹிந்து ராஜ் கிடையாது, மாறாக எந்தவொரு பெரும்பான்மை மத அல்லது சமூக வேறுபாடு இன்றி அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாக இந்தியா விளங்கும் என்று மகாத்மா காந்தி தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: