NPR: தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பட மூலாதாரம், Getty Images
பிரகாஷ் ஜவடேகர்
இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவரின் அடையாளங்களையும் பதிவு செய்ய தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவேட்டை புதுப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு அரசுக்கு 3,941 கோடி ரூபாய் செலவாகும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
"இதற்காக யாரும் எந்த ஆவணங்களையும் கொடுக்கத் தேவையில்லை. இந்தியாவில் உள்ள அனைவரும் இதில் சேர்க்கப்படுவார்கள்," என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை இந்திய அரசு அமல்படுத்துவதற்கு எதிராகவும் போராட்டங்கள் இந்தியா முழுவதும் வலுவடைந்து வரும் சூழலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் தனிமனிதர்களின் 'பயோமெட்ரிக்' தகவல்களும் உள்ளடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: