கோவை சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு  தூக்குத்தண்டனை 

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

கோவையில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் கோவை பன்னிமடையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு தூக்கு தண்டனை அளித்து இன்று (வெள்ளிக்கிழமை) போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302ன்படி சாகும் வரை தூக்கு தண்டனையும், போஸ்கோ 5L, 5M பிரிவுகளின்படி ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1000 அபராதமும், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 201ன்படி ஏழு ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1000 அபராதமும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் மார்ச் 27 ஆம் தேதி வீட்டின் அருகே சிறுமி சடலாமாக மீட்கப்பட்டார்.

முன்னதாக நேற்று இந்த வழக்கில் திடீர் திருப்பமாக கொல்லப்பட்ட சிறுமியின் டி.என்.ஏ ஆய்வில் மற்றொரு ஆணின் விந்து இருப்பது கண்டறிப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் உரிய விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிறுமியின் தாயார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மற்றொரு நபரின் விந்தணுக்கள் இருப்பதாக டி.என்.ஏ சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது விசாரணை நடத்தப்படும் என நீதிபதி ராதிகா தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தில் கோவை துடியலூர் பகுதியில், விளையாடச் சென்ற ஏழு வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு பின்னர் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் 15 பேரிடம் விசாரணை செய்து சந்தோஷ்குமார் எனும் 34 வயதாகும் நபர் அச்சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்துள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த 18 ஆம் தேதி புதிதாக திறக்கப்பட்ட போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழங்கப்படும் முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :